நாகை. அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுரையின் பேரில் நாகை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நாகை நகரம் முழுவதும் “டெங்கு விழிப்புணர்வு” துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
நகர செயலாளர் M.சாகுல் ஹமீது தலைமையில் மஜக செயலவீரர்கள் மஜக டீசர்ட் அணிந்து மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இதில் நகர துணை செயலாளார் M.அமீருதீன், M.L.A அலுவலக செயலாளார் சம்பத், மாணவர் இந்தியா நகர செயலாளார் K.முஹம்மது அசாருதீன், மாணவர் இந்தியா துணை செயலாளார் H.சுலைமான் அனாஃப், 25வது வார்டு செயலாளார் A.செமீர்தீன், நகர தொழில் நுட்ப அணி செயலாளார் S.முஹம்மது ஹனிஸ் தீன், நகர தொழிற்சங்க துணை செயலாளார் செல்லதுரை என்கிற அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்.
13.10.17