ஆம்பூர்.அக்.13., வேலூர் மாவட்டம், கர்நாடக மற்றும் ஆந்திர எல்லை ஓர மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதி மற்றும் துத்திப்பட்டு ஊராட்சி பகுதிகளில் உள்ள 100 – க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.
ஆற்றின் கரையோரம் வீடுகட்டி வசிக்கும் ஏழை மக்கள், தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.
வெள்ளம் இன்னும் அதிகமாகலாம் என்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாலாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களை #மஜக ஆம்பூர் நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.