நெல்லை.அக்.16., மேலப்பாளையத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அதிப்படியான வரி விதிப்பு நடவடிக்கைகளையும். டெங்கு ஒழிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மந்த நிலையில் செயல் படுவதையிம் கண்டித்தும் இன்று மேலப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் யூ.வாசிம் முபாரக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்..
அறந்தை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ஒலி முகம்மது அனைவரையும் வரவேற்றார். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முகம்மது காலித், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் பாசித்கான் ஆகியோர் அழைப்பார்களாய் கலந்துக்கொண்டனர். மாவட்ட செயலாளர் முபாரக் அலி தீர்மானங்களை விளக்கி பேசினார். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி நன்றி கூறினார். நிர்வாக குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... 1. கெயில் எரிவாயு திட்டம் விளைநிலங்கள் வழியே நிறைவேற்றுவது விவசாயிகளுக்கு பேரடியாக உள்ளது. எனவே இத்திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு நெடுஞ்சாலைகள் வழியே அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 2. பயிர் இழப்பீடு காப்பிட்டு தொகை வழங்குவதில் குளருபடிகளும், பாரபட்சமும் உள்ளது. எனவே பயிர் இழப்பீடு காப்பிட்டு தொகை பாரபட்சம்
மூன்று ஊராட்சிக்குட்ப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் முகாம்
திருவாரூர்.அக்.16., திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் ஊராட்சியில் உள்ள மாணவ மாணவியர்க்களுக்கு கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஜக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஷாகுல் ஹமீது அவர்களும், மஜக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கட்டிமேடு ஆசிப் முன்னிலை வகுத்தனர். இதில் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,ஷா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆதிரெங்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சேகல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் கட்டிமேடு கிளை துனை செயலாளர் ஹாரிஸ், மருத்துவ அணி செயலாளர் ஆசிக், ஆதிரெங்கம் கிளை செயலாளர் அப்துல்லா, இளைஞர் அணி செயலாளர் உசேன் அலி, மருத்துவ அணி செயலாளர் பைசல் நிர்வாகிகள் மஜக தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக மஜக திருத்துறைப்பூண்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அசீம் அலிம் நன்றி கூறினார். தகவல்;- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WINGS #கட்டிமேடு_ஆதிரெங்கம் #திருவாரூர்_மாவட்டம்
கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
கோவை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்திய பகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் மரக்கடை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மத்தியபகுதி செயலாளர் பூ.காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மத்திய பகுதி பொருளாளர் கமால் மற்றும் நிர்வாகிகள் ஜமால், முத்தலி, வீடியோரபி, ரபீக், பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர், அப்பகுதியில் உள்ள புனித சவேரியார் பள்ளி குழந்தைகள் 300 பேருக்கும், பேருந்து பயணிகளுக்கும் அருகில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர். அதன் பிறகு அந்த பகுதியில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளை பார்வையிட்ட மஜகவினர் உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 16/10/2017
IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்..!
வேலூர்.அக்.16., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக நேற்று (15.10.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை IKP முன்னாள் மாநகர செயலாளர் மௌலவி S.S.அகில் ரஷாதி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பயிற்சி உரையாக A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் S.முஹம்மத் ஜாபர் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல்: #IKP_ஊடகபிரிவு #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 15.10.2017