அறந்தை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் ஒலி முகம்மது அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முகம்மது காலித், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் பாசித்கான் ஆகியோர் அழைப்பார்களாய் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செயலாளர் முபாரக் அலி தீர்மானங்களை விளக்கி பேசினார். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி நன்றி கூறினார்.
நிர்வாக குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…
1. கெயில் எரிவாயு திட்டம் விளைநிலங்கள் வழியே நிறைவேற்றுவது விவசாயிகளுக்கு பேரடியாக உள்ளது. எனவே இத்திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு நெடுஞ்சாலைகள் வழியே அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. பயிர் இழப்பீடு காப்பிட்டு தொகை வழங்குவதில் குளருபடிகளும், பாரபட்சமும் உள்ளது. எனவே பயிர் இழப்பீடு காப்பிட்டு தொகை பாரபட்சம் இன்றி நியாயமாகவும், விரைவாகவும் விவசாயிகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
3. டெங்கு காய்ச்சல் பல மாதங்களாக தமிழகத்தை ஆட்கொண்டு உள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர் செய்தியாய் உள்ளது. எனவே தமிழகத்தை மருத்துவ பேரிடர் மாநிலமாக அறிவித்து போர்கால அடிப்படையில் மருத்துவ திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.
4. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோருக்கு பொதுவான நிவாரண தொகை இதுவரை அறிவிக்கவில்லை. எனவே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோருக்கு நிபந்தனைகள் இன்றி இழப்பீடு தொகையாக 5 லட்சம் ரூபாயும், காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. புதுக்கோட்டை நகரில் இருந்த மாவட்ட பொது மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இடம் மாறியுள்ளது. இந்நிலையில் அறந்தாங்கியில் உள்ள பொதுமருத்துவமனை அதிகபட்ச மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அறந்தாங்கி தலைமை பொது மருத்துவமனையை நவீனப்படுத்தி தரம் உயர்த்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
6. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆகியும் அப்போது இருந்த இந்திய பிரதமர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிதரவில்லை. பாபர் மசூதியை இடித்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. என்பவற்றை கண்டித்தும், பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தர கோரியும் டிசம்பர் 6 அன்று அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
ஆகியன தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
15.10.17