கோவை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்திய பகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் மரக்கடை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
மஜகவின் மத்தியபகுதி செயலாளர் பூ.காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மத்திய பகுதி பொருளாளர் கமால் மற்றும் நிர்வாகிகள் ஜமால், முத்தலி, வீடியோரபி, ரபீக், பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்,
அப்பகுதியில் உள்ள
புனித சவேரியார் பள்ளி குழந்தைகள் 300 பேருக்கும், பேருந்து பயணிகளுக்கும்
அருகில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர்.
அதன் பிறகு அந்த பகுதியில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளை பார்வையிட்ட மஜகவினர் உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தினார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
16/10/2017