முத்துப்பேட்டை… தர்ஹா தலைவர் பாக்கர் அலியுடன் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் சந்திப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் துனைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் முத்துப்பேட்டை ஜம்புவானோடை தர்ஹா அறங்காவலர் குழு தலைவர் ஜனாப் S.S.பாக்கர் அலி ஷாஹிப் அவர்களை அவர் இல்லத்தில் மறியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது மஜக-வின் 8-ஆம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துகளை கூறிய அவர் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், சமூக பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மஜக-வின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துவரும் அவர், அவ்வப்போது அலைபேசி வாயிலாக துனைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களை தொடர்புகொண்டு சமுதாய கோரிக்கைகள் சிலவற்றை கூறி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்வார்.

தற்போதைய சூழலில், தொடர்ந்து மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் வீரியமுடன் மஜக செயல்பட வேண்டும் என்றார்.

சமீபத்தில் சிலரின் வலைதள பதிவுகள் குறித்து கவலையுடன் பேசிய அவர், சகோதரர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தனி பாதுகாப்பு (PSO) ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தொடர்ந்து இன்னும் வீரியமுடன் நீங்கள் எல்லாம் பணியாற்ற இறைவனை பிரார்த்திப்பதாக கூறி வாழ்த்தினார்.

இச்சந்திப்பின் போது மஜக-வின் MJVS திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜான் முகம்மது அவர்களும், அமீரக துபாய் நகர பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது அவர்களும், நாச்சிகுளம் கிளை செயலாளர் சதாம் உசேன் அவர்களும் உடனிருந்தனர்.