நெல்லை.அக்.23., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சுத்தமல்லி டேமில் குளிக்க சென்றவிட்டு திரும்பும் நிலையில் சாலைவிபத்தில் சிக்கியுள்ளனர். இதில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த சலீம் என்ற இளைஞர் பலியாகியுள்ளார். இன்னும் நான்கு இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து செய்தி அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, நேரில் சென்று மரணமடைந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் கலீல், பொருளாளர் சேக், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் வாஹித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் வாஸீம் முபாரக், மேலப்பாளையம் நிர்வாகி மீரான் மெய்தீன் ஆகியோர் உடன் சென்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம் 23_10_17
தமிழகம்
தமிழகம்
மேலப்பாளையத்தில் வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மஜக பொதுச்செயலாளரிடம் மனு..!!
நெல்லை.அக்.23., திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளில் கூடுதல் வரிவிதிப்பு என்ற பெயரில் பல மடங்கு சொத்து வரியினை உயர்த்த வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள். வீடுகள் மற்றும் கடைகளை அளவு செய்வதனை நிறுத்த கோரியும் வரி உயர்வை கைவிடக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துமாறு மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள் மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்கம், மேலப்பாளையம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் நுகர்வோர் கண்காணிப்பகம் சார்பில் இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவையும், விளக்கத்தையும் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதலமைச்சரிடம் விரைவாக பேசுவதாக உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_கிழக்கு_மாவட்டம்
கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!
கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் A.k.முஹம்மது சலீம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் மஸ்ஜித் இக்லாஸ் பள்ளி நிர்வாகிகள் முபாரக், , சமீர், சித்திக் மற்றும் மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாகிகள் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சுமார் 1டன் குப்பைகளை அகற்றினர். மேலும் இந்த பகுதியின் வழியாக சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் செல்வதால் குப்பைகள் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் அதிகமான புதிய குப்பை பெட்டிகளும் வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது, கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்தனர். மேலும் பொது மக்களின் நலனுக்காக விழிப்புணர்வு பதாகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.10.17
நெல்லையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து மஜக தலைவர்கள் ஆறுதல்..!
நெல்லை.அக்.23., இன்று கந்து வட்டி கொடுமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் #தீ வைத்து கொளுத்தி கொண்டனர். இச்சம்பவம் அறிந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் கலீல், பொருளாளர் சேக், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் வாஹித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் வாஸீம் முபாரக், மேலப்பாளையம் நிர்வாகி மீரான் மெய்தீன் ஆகியோர் உடன் சென்றனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து சகிக்க முடியாமல் கண் கலங்கினர். மருத்துவமனை டீன் அவர்களையும்,மருத்துவர்களையும்,செவிலியர்களையும் சந்தித்து தீவிர சிகிச்சை அளிக்கும்படி கோரினர். பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்.? என்று விளக்கம் கேட்டார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், இச்சம்பவத்திற்கு முன்னர் இக்குடும்பத்தினர் ஆட்சியரிடமும், காவல்துறையிடமும்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மஜகவின் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்…
சென்னை.அக்.23.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதியில் லாயிட்ஸ் ரோடு மார்க்கெட்டிலும், ஐஸ் ஹவுஸ் ஷேக் தாவூத் தெரு எதிரிலும் நிலவேம்பு குடிநீர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கபட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. லாயிட்ஸ் ரோடு மார்க்கெட் முகாமை மாநில செயலாளர் சகோ.A.சாதிக் பாஷா அவர்களும், ஐஸ் ஹவுஸ் முகாமை மாநில துணை செயலாளர் சகோ.புதுமடம் அனீஸ் அவர்களும் துவங்கி வைத்தனர். இதில் மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட து.செயலாளர் பீர் முஹம்மது மற்றும் அமீர் அப்பாஸ், பகுதி பொருளாளர் ஹசன், பகுதி து.செயலாளர்கள் முஹம்மத் அலி இஷாக், ஜமால் முஹம்மது மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம்