சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன் பிரட், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது மேற்பார்வையில், மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், வடசென்னை முன்னால் மாவட்டத் துணைச் செயலாளர் அன்வர், வட்டச் செயலாளர் ஹனீப் உட்பட நிர்வாகிகள் நிவாரணப்பணியில் ஈடுபட்டனர். உணவுகளை வீடு வீடாக சென்று வழங்கினர். மஜகவின் மனிதநேய பணிகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். ஏற்கனவே பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த பகுதியிலுள்ள குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
புளியங்குடியில் வேகமெடுக்கும் மஜக!
நெல்லை.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் புளியங்குடி நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் #புளியங்குடி_செய்யது_அலி அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டும் நெறிமுறைகளுடன் ஆலோசனை வழங்கினார்கள். மாவட்ட துணை செயலாளர் #ஷாஜகான் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, வார்டு நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி, 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று புளியங்குடி நகர பொதுக்குழு கூட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடத்துவது. என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புளியங்குடி_நகரம்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் பார்வையிட்டார்…! நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் பேசினார்…!
சென்னை.நவ.01., இன்று வட சென்னையில் திரு.வி.க நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார். இவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், பொறியாளர் சைபுல்லாஹ், வடசென்னை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றவர்கள் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், மின்சார இணைப்பு பெட்டிகள் அபாய நிலையில் இருப்பதாகவும் மக்கள் கூறினர். உடனடியாக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.உதயகுமார் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.வேலுமணி ஆகியோர்களை தொடர்பு கொண்டு மக்களின் புகார்களை தெரிவித்தார். மேலும் பேரிடர் மேலாண்மை துறையை தொடர்பு கொண்டு புளியந்தோப்பு, திரு.வி.க நகர் பகுதியில் உள்ள டிக்காஸ்டர் ரோடு, மன்னார் சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கட சாமி தெரு, இரட்டை பிள்ளையார் தெரு, நாராயண சாமி தெரு, குட்டித்தம்பிரான் தெரு, அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில்
நாகையில் மழையால் இடிந்த வீடு..! நகர மஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்..!!
நாகை.நவ.01., நாகப்பட்டினம் வேதநாயகம் செட்டி தெரு, 4 வது சந்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவருடைய வீட்டின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_M_தமிமுன்_அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாகை நகர (மஜக) நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வீட்டின் உரிமையாளர் ஜோதி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம்.
மஜக தலைமையாகத்திற்கு மதமுமுக தலைவர் வருகை..! மாநில பொருளாளருடன் சந்திப்பு..!!
சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் J.சீனி முஹம்மது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவர்களுடன் மதமுமுக மாநில செயலாளர் H.முஹம்மது கடாபி, தலைமை நிலையச் செயலாளர் J.S.மீரான் , தலைமை கழக செயலாளர் A.காதர் ஷரிப் , ஊடக பிரிவு செயலாளர் முஹம்மது ஜியா , மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் H.முஹம்மது கனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா உடன் இருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 30.10.2017