புளியங்குடியில் வேகமெடுக்கும் மஜக!

image

image

image

நெல்லை.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் புளியங்குடி நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

இதில் மாநில துணை செயலாளர் #புளியங்குடி_செய்யது_அலி அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டும் நெறிமுறைகளுடன் ஆலோசனை வழங்கினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் #ஷாஜகான் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தீவிர உறுப்பினர் சேர்க்கை,

வார்டு நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி,

12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று புளியங்குடி  நகர பொதுக்குழு கூட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடத்துவது.

என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புளியங்குடி_நகரம்