சென்னை.நவ.01., இன்று வட சென்னையில் திரு.வி.க நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார்.
இவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், பொறியாளர் சைபுல்லாஹ், வடசென்னை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றவர்கள் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், மின்சார இணைப்பு பெட்டிகள் அபாய நிலையில் இருப்பதாகவும் மக்கள் கூறினர்.
உடனடியாக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.உதயகுமார் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.வேலுமணி ஆகியோர்களை தொடர்பு கொண்டு மக்களின் புகார்களை தெரிவித்தார்.
மேலும் பேரிடர் மேலாண்மை துறையை தொடர்பு கொண்டு புளியந்தோப்பு, திரு.வி.க நகர் பகுதியில் உள்ள டிக்காஸ்டர் ரோடு, மன்னார் சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கட சாமி தெரு, இரட்டை பிள்ளையார் தெரு, நாராயண சாமி தெரு, குட்டித்தம்பிரான் தெரு, அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இடியும் நிலையில் உள்ள புளியந்தோப்பு ஆட்டு தொட்டி அருகே உள்ள ஹவுஸிங் போர்ட் குடியிருப்பு கட்டிடத்தை சீல் வைத்து அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அங்கு வந்த ஊடகத்துறையினரை சந்தித்த பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகளின் கருத்துகளை மட்டுமே கேட்காமல், களத்துக்கு வந்து மக்களின் சிரமங்களை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.
மேலும் கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து இறந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்திற்கு மஜக சார்பில் இரங்கலை தெரிவித்து கொண்டவர், அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை
01_11_17