திருவள்ளூர்.பிப்.08..,
அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து கறுப்பு (CAA, NRC, NPR) சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூரில் நேற்று (07.02.2020) மாலை நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இக்கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஹாரூன் ரசீது அவர்கள் CAA-வால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால் இந்த ரஜினி முதல் ஆளாக குரல் கொடுப்பான் என்று ரஜினி கூறுகிறார். அப்படி என்றால்… முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது குடும்பத்தாருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார். கார்கில் போரை தலைமை தாங்கி நடத்திய ராணுவ வீரர் சனாவுல்லா குடியுரிமை பறிக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் தைமூர் குடியுரிமை மறுக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகள் சார்பில் தலைவர்கள் ஜமாத்தார்கள், மஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன், மாவட்டப் பொருளாளர் பக்ருதின், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ஷாகுல் ஹமீது மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் என பெரும் திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்மேற்குமாவட்டம்
08.02.2020