கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளருடன் மஜகவினர் சந்திப்பு..!

ஜூலை.17.,

கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ் தலைமையில் மஜகவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அச்சமயம் கார்டூனிஸ்ட் வர்மாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறு பதிவாக வெளியிட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உடனே தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான் மற்றும் மாநகர பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்.
16-07-2020