கோவை:ஜூலை.16.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு தப்லீக் ஜமாத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் கொரோனா தொடங்கிய காலம் முதல் டெல்லியிலிருந்து தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் வரவழைத்தது, தற்போது வெளிநாட்டு தப்லீக் சகோதரர்களை சென்னை புழலில் இருந்து மாற்றி ஹஜ் இல்லத்தில் தங்க வைத்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்தும் அதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA., அவர்களின் முன்னெடுப்பு முயற்சிகள் குறித்தும் தப்லீக்கினர் நினைவு கூர்ந்தனர்.
மேலும் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜாமாத்தினருக்கு உதவிய மஜகவினருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
தப்லீக் ஜமாத்தினரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் கூறும்போது, தப்லீனரின் விவகாரத்தில் ஆரம்பம் முதல் மஜக பொதுச்செயலாளரின் முன் முயற்சிகள் குறித்தும், கோவை மாவட்ட மஜகவினரின் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வரக்கூடிய காலங்களில் கோவையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், சிங்கை சுலைமான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல்ரஹ்மான், ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
16.07.2020