திருவண்ணாமலை மஜக சார்பில் கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் விநியோகம்.!

ஜூலை.16.,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை திருவண்ணாமலை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலாளர் G.அக்பர் அவர்கள் தலைமையில் நகரப் பொருளாளர் H.அம்ஜத் கான் முன்னிலையில் காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலருக்கும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சையத் அலி அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்தார், IKP மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் H.அமிர் கான் ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#திருவண்ணாமலை_மாவட்டம்
16-07-2020