தூத்துக்குடி.நவ.09 ., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 09-11-2017 காயல்பட்டினத்தில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் சாலைகள் சீரமைப்பு, தெரு விளக்குகள் சரி செய்தல், நகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குடி நீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடி நீர் நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் நகர மஜக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், நகர துனை செயலாளர் ஜீயாவுதீன், மஜக உறுப்பினர் ஷல்சபில் ஆகியோர் உடன் இருந்தனர். #தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம். 09-11-2017
தமிழகம்
தமிழகம்
பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்தவர்..! ஐயா.நன்னன் மறைவுக்கு மஜக இரங்கல்..!!
(#மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தனித்தமிழன் இயக்கத்தின் ஒப்பற்ற பரப்புரையாளராகவும், தமிழ் மொழி வல்லுநரகவும் வாழ்நாள் முழுக்க உழைத்த தமிழ் பேரரிஞர் ஐயா. நன்னன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுள்ளகிற்கு ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. இதழ்கள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்த திராவிட இயக்க புதல்வரை இழந்திருக்கிறோம். தனது பணிகள் மூலம் நிகழ்கால தமிழாசிரியர்களுக்கு இவரே முன்னோடியாக திகழ்ந்தார். அவர் நவீன தமிழ் இலக்கணத்தின் தந்தையாகவும் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்ததுடன் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அடுத்த தலைமுறைக்கும் தனது பணிகளை விரிவுபடுத்தி சென்றிருக்கிறார். தவறின்றி தமிழ் எழுதுவோம், திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் நூல்களின் உரை விளக்கங்கள், பெரியார் கணினி ஆகிய படைப்புகள் அவரது பெருமையை பேசும். அவரது செம்மொழி தமிழ் வளர்த்த பணியை நிகழ்கால தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினற்கும், திராவிட இயக்க மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்டோரின் துயரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியும் உளப்பூர்வமாக பங்கேற்கிறது... இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09.11.17
தோழர்.சீமான் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…
காஞ்சி.நவ.09., மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் தோழர்.சீமான் அவர்களை நேற்று (08.11.17) அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் N.அன்வர் பாஷா, துறைமுகம் பகுதி செயலாளர் சீனி முஹம்மது, துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அஸ்கர்அலி மற்றும் அம்ஸத் ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம்.
பேர்ணாம்பேட்டில் மஜக புதிய கிளை உதயம்…!
வேலூர்.நவ.08., பேர்ணாம்பேட் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் K.ரஷீத் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. காதர்பேட் T.R.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 2-வது வார்டு மற்றும் 18-வார்டு புதிய கிளை உதயமானது. 2-வார்டு கிளை நிர்வாகிகள்:- செயலாளர் - சுபேர் பொருளாளர் - இம்தியாஸ் து.செயலாளர்கள் - அஜீம், அஸ்லாம், அமீன் இளைஞர் அணி செயலாளர் - அன்சர் பாஷா பொருளாளர் - அக்தர் துணை செயலாளர் - ஷீரிப் 18-வார்டு கிளை நிர்வாகிகள் :- செயலாளர் - அக்பர் பொருளாளர் - உசேன் து.செயலாளர்கள் - ஜாகீர், அஸ்கர் அகியோர் கிளை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். தகவல்; #மஜக_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பேர்ணாம்பேட்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 08-11-2017
தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாக…… நாகையில் மஜக சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்!
நாகை.நவ.08., புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மக்களுக்கு மத்தியில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாகை (தெற்கு) நாகை (வடக்கு)திருவாரூர், தஞ்சை (வடக்கு) கடலூர்(வடக்கு) விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவில் தேர்வு செய்யப்பட்ட முக்கிய செயல்வீரர்கள் 125 பேர் பங்கு கொண்டனர். Save the children_Nokia மற்றும் அவ்வை கிராம அமைப்பு ஆகிய தொண்டு நிறுவனங்கள் இப்பயிற்சியை வழங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, காயமடைந்தவர்களை மீட்பது, இறந்தவர்களை கண்டெடுப்பது, ஆபத்தான மீட்பு பணிகளை கவனமாக கையாள்வது என செயல்முறை பயிற்சிகள் நடத்தப்பட்டன. இம்முகாமை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டு பயிற்சி நிறைவு சான்றிதழ்களில் கையெழுத்திட்டார். தமிழக அளவில் அரசியல் மற்றும் மக்கள் இயக்கங்களில் மஜக தான் இத்தகைய பயிற்சி முகாமை முதல் முறையாக டெல்டா மாவட்டங்களை தேர்ந்தெடுத்து நடத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வை மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் மாவட்ட வாரியாக