பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்தவர்..! ஐயா.நன்னன் மறைவுக்கு மஜக இரங்கல்..!!

image

(#மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

தனித்தமிழன் இயக்கத்தின் ஒப்பற்ற பரப்புரையாளராகவும், தமிழ் மொழி வல்லுநரகவும் வாழ்நாள் முழுக்க உழைத்த தமிழ் பேரரிஞர் ஐயா. நன்னன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுள்ளகிற்கு ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

இதழ்கள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்த திராவிட இயக்க புதல்வரை இழந்திருக்கிறோம்.

தனது பணிகள் மூலம் நிகழ்கால தமிழாசிரியர்களுக்கு இவரே முன்னோடியாக திகழ்ந்தார். அவர் நவீன தமிழ் இலக்கணத்தின் தந்தையாகவும் திகழ்ந்தார்.

சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்ததுடன் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அடுத்த தலைமுறைக்கும் தனது பணிகளை விரிவுபடுத்தி சென்றிருக்கிறார்.

தவறின்றி தமிழ் எழுதுவோம், திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் நூல்களின் உரை விளக்கங்கள், பெரியார் கணினி ஆகிய படைப்புகள் அவரது பெருமையை பேசும்.

அவரது செம்மொழி தமிழ் வளர்த்த பணியை நிகழ்கால தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினற்கும், திராவிட இயக்க மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்டோரின் துயரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியும் உளப்பூர்வமாக பங்கேற்கிறது…

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.11.17