லால்பேட்டை சந்திப்புகள்.. மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

ஜூன்:28,

கடலூர் மாவட்டம் லால்பேட்டைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை தந்து கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் வருகை தந்தனர்.

பிறகு காலம் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை தலைவர் தளபதி ஷபிக்குர் ரஹ்மான் மற்றும் ஜமாத்துல் உலமா முன்னாள் தலைவர் மவ்லவி அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் ஆகியோர் இல்லம் சென்று அவர்களின் மறைவுக்காக குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இரண்டு தலைவர்களின் நட்பையும், அவர்கள் மஜக மீது கொண்டிருந்த மரியாதையையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர், லால்பேட்டை பேரூர் கவுன்சிலர் OR ஜாகிர் ஹுசைன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, அமீரக துணை செயலாளர் S.A.தையூப், துபை மாநகர பொருளாளர் பயாஜ், துபை மாநகர முன்னாள் செயலாளர் ஷபிக்குர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், பொருளாளர் நூர், நிர்வாகிகள் ஜாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_கடலூர்_மாவட்டம்
28.06.2022