நாகை தொகுதியில் இன்றும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அமைச்சர் O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால் மற்றும் அதிகாரிகளுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட சென்றார். நாகை தொகுதிக்குட்பட்ட 174 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனங்குடி ஏரியை பெரும் நீர் தேக்கமாக மாற்றுவது குறித்து சட்டசபையில் 3 முறை பேசியிருக்கிறார். முதல்வர் எடப்பாடியாரிடமும் இது குறித்து நேரில் வலியுறுத்தி இருக்கிறார். இன்று அமைச்சர், MP மற்றும் மாவட்ட ஆட்சியருடன் அப்பகுதிக்கு M.தமிமுன் அன்சாரி MLA சென்றார். அமைச்சர் O.S.M. அவர்கள், இது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் தூர் வாரி சீரமைக்கும் பணிக்கு திட்ட வரையறை செய்திடுமாறு உத்தரவிட்டார். மேலும், பிராவிடயான் ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டவும், அலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பனங்குடி ஏரியில் சேமிக்கப்பட்டு, கோடை காலத்தில் நாகை தொகுதி முழுக்கவும், தேவைப்படின் அருகில் உள்ள கீழ்வேளூர் தொகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திருப்புமுனை திட்டத்திற்கு இன்று வித்திடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சேகல், மருங்கூர், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், வடகரை உள்ளிட்ட திருமருகல் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள்,
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு.
S.அப்துல் மஜித் #18/7/34, அச்சுக் கட்டு தெரு திருப்பத்தூர்- 630211 தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். இவண், #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்_செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.11.17
சமூக வலை தளங்களில் வந்த செய்தியை அடுத்து களம் இறங்கிய மஜக..!
கோவை.நவ.10., கோவை மாநகராட்சி 86-வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து மழை காலங்களில் சாக்கடைகள் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதாகவும் இதனால் அந்த வழியாக யாரும் செல்லமுடியாத நிலை ஏற்படுவதாகவும் ஒரு ஆண்டிற்கு மேலாகியும் ஆட்சியாளர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக வலை தளங்களில் செய்தி வந்தது. தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன், IKP மாவட்ட செயலாளர் அனீபா, 86வது வார்டு செயலாளர் அரபாத், 77வது வார்டு செயலாளர் இப்ராஹீம், பொருளாளர் பயாஸ், துணைசெயலாளர் அலி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சாக்கடையில் மலைப்பாம்பு ஒன்று வந்ததாகவும் அதை அடித்துவிட்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் பாம்பை எடுத்து நிர்வாகிகளிடம் காண்பித்தனர். மேலும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இங்கு சாக்கடை மேல் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மழை காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் அவ்வப்போது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து விடுவதாகவும் தாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு மஜக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக
மஜக தலைமை நியமன அறிவிப்பு…!
மனிதநேய ஜனநாயக கட்சியில் மத்திய சென்னை மாவட்டமாக இருந்ததை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு என கிழ்கண்டவாறு செயல்படும். மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கிழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள். மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் I.முஹம்மது இப்ராஹிம் Mobile No: 9884440551 மாவட்டப் பொருளாளர் S. அன்வர் இப்ராஹிம் Mobile No: 7418222111 மாவட்ட துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது Mobile No: 9600119001 மாவட்ட இளைஞர்அணி G. முஹம்மது கனி Mobile No: 9940619631 இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக செயல்படுவார்கள். இவண், M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 10.11.2017
மதமுமுக மஜகவுடன் இணைப்பு விழா..! நவம்பர் புரட்சி என்று மஜக பொருளாளர் எழுச்சி உரை…!!
சென்னை.நவ.10., தமிழகத்தில் செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்கிற அமைப்பு அதன் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் நேற்று 09.11.2017 மாலை சென்னை மண்ணடியில் உள்ள ஆயிஷா மஹாலில் மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்தது. மிக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களின் முன்னிலையில் மதமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மஜகவில் இணைந்தனர். மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சீனி முஹம்மது அவர்கள் உரையில் நாட்டில் நடக்கும் பாசிச அரசியல் பற்றியும், இனி வரவிருக்கும் டிசம்பர் 6 இரயில் முற்றுகை பற்றியும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மஜகவின் தொடர்ச்சியாக பல அமைப்பினர் சேர்ந்து வருவதையும், நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் தொடர்ச்சியாக புளியங்குடி செய்யது அலி, தாரிக் வரிசையில் தற்போது சீனி முஹம்மது போன்ற இன்னும் பல தலைவர்கள் விரைவில் இணைய உள்ளதாக கூறினார். இவ்விழாவினை மாநில துணைச் செயலாளர் ஷமிம் அகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா கட்சியின்