கோவை.நவ.10., கோவை மாநகராட்சி 86-வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து மழை காலங்களில் சாக்கடைகள் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதாகவும் இதனால் அந்த வழியாக யாரும் செல்லமுடியாத நிலை ஏற்படுவதாகவும் ஒரு ஆண்டிற்கு மேலாகியும் ஆட்சியாளர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக வலை தளங்களில் செய்தி வந்தது.
தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன், IKP மாவட்ட செயலாளர் அனீபா, 86வது வார்டு செயலாளர் அரபாத், 77வது வார்டு செயலாளர் இப்ராஹீம், பொருளாளர் பயாஸ், துணைசெயலாளர் அலி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது சாக்கடையில் மலைப்பாம்பு ஒன்று வந்ததாகவும் அதை அடித்துவிட்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் பாம்பை எடுத்து நிர்வாகிகளிடம் காண்பித்தனர்.
மேலும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இங்கு சாக்கடை மேல் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மழை காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் அவ்வப்போது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து விடுவதாகவும் தாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு மஜக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாகவும் அப்படியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் மஜக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
10.11.17