நாகை தொகுதியில் இன்றும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அமைச்சர் O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால் மற்றும் அதிகாரிகளுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட சென்றார்.
நாகை தொகுதிக்குட்பட்ட 174 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனங்குடி ஏரியை பெரும் நீர் தேக்கமாக மாற்றுவது குறித்து சட்டசபையில் 3 முறை பேசியிருக்கிறார். முதல்வர் எடப்பாடியாரிடமும் இது குறித்து நேரில் வலியுறுத்தி இருக்கிறார்.
இன்று அமைச்சர், MP மற்றும் மாவட்ட ஆட்சியருடன் அப்பகுதிக்கு M.தமிமுன் அன்சாரி MLA சென்றார்.
அமைச்சர் O.S.M. அவர்கள், இது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் தூர் வாரி சீரமைக்கும் பணிக்கு திட்ட வரையறை செய்திடுமாறு உத்தரவிட்டார்.
மேலும், பிராவிடயான் ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டவும், அலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பனங்குடி ஏரியில் சேமிக்கப்பட்டு, கோடை காலத்தில் நாகை தொகுதி முழுக்கவும், தேவைப்படின் அருகில் உள்ள கீழ்வேளூர் தொகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திருப்புமுனை திட்டத்திற்கு இன்று வித்திடப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து சேகல், மருங்கூர், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், வடகரை உள்ளிட்ட திருமருகல் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்,
திருமருகலில் மழையினால் சேதமடைந்த சாலையினை சீர் செய்யும் பணி மற்றும் பேருந்து நிலையம் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர் வாரப்படும் வடிநீர் கால்வாய் பணியையும் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆய்வு செய்தார்.
இதன் பிறகு நாகை ஒன்றியம் தெத்தி, பாலையூர், ஐவநல்லூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இச்சந்திப்புகளில் MLA அவர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள், நாகை முபாரக், திட்டச்சேரி ரியாஸ், வடகரை பரக்கத் அலி, திருமருகல் ராதாகிருஷ்னன், சதக்கத்துல்லா, ஏனங்குடி முஜிப் ரஹ்மான், சாகுல் ஹமீது, அஜிஸ் ரஹ்மான், ஆறுமுக பாண்டியன், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களும் வருகை தந்தனர்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
10.11.17