வேலூர்.மே.19., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (18.05.2018) மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் #கௌஸ்_குஸ்ரு_மொஹிதீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 03.06.2018 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது என்றும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் அண்ணன் #M_தமிமுன்_அன்சாரி மற்றும் மாநில பொருளாளர் அண்ணன் #S_S_ஹாரூன்_ரஷீத் அவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் #J_S_ரிபாயி_ரஷாதி அவர்களை அழைத்து வேலூர் கிழக்கு மாவட்டத்தில் இஃப்தார் நிகழ்ச்சி கொணவட்டம் பகுதியில் நடத்துவது முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன் மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர் வர்த்தகர் அணி செயலாளர் ஷமீல் 3ம் மண்டல நிர்வாகிகள்முஹம்மத் பாய்ஸ், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ்,ஜாபர்,ரிஸ்வான் அஸ்லம் பாஷா, சர்வர் ஆகியோர் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 19.05.2018
தமிழகம்
தமிழகம்
குதிரை பேரத்திற்கு முற்றுப்புள்ளி.
(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கர்நாடகாவில் குறுக்குவழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று முயற்சித்த பாஜகவின் கனவில் மண் விழுந்திருக்கிறது . காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 8 MLA களை உருவி , குதிரைப்பேரம் மூலம் கவர்னர் உதவியோடு அவர்கள் போட்ட சதித்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த 'செக்' காரணமாக நினைத்தது நடைபெறாமல் போய்விட்டது . முதலமைச்சராக பதவியேற்ற 56 மணிநேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்யும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் . இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது . பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி மஜதவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது வரவேற்கதக்கது . பொதுவில் குமாரசாமி ஒரு அதிர்ஷ்டக்காரர் . அவர் அப்பா தேவகௌடாவை போலவே! முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஒன்றுபட்ட பழைய ஜனதாதளத்தின் சார்பில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பிரதமர் ஆனார் . அதே அதிர்ஷ்ட காற்று குமாரசாமியின் பக்கமும் திரும்பியுள்ளது . இவர்களின் கூட்டணி ஆட்சியில் கர்நாடகா வளம் பெற வேண்டும் . நல்லாட்சி கொடுத்த சித்தராமையாவுக்கே முழுமையான வெற்றியை மக்கள் கொடுக்கவில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். அதுபோல் காவிரி ஆற்று உரிமையில்
இனியாவது காவிரியில் தண்ணீர் கிடைக்குமா?
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அருதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கர்நாடக விசன் போன்ற அமைப்புகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அதை நிராகரித்தது. தங்களின் சாதனைகள் போதும் என்ற கற்பனையில் காங்கிரஸ் கட்சி மிதந்தது. தேவகவுடா அவர்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் உவைசியின் M.I.M கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்தார். மேலும் மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றார். அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெருமளவு பாதித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இருப்பினும் பாஜகவின் மதவெறி- ஊழல் ஆட்சி கர்நாடகாவில் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் இறங்கி வந்தது பாராட்டத்தக்கது. எது எப்படி இருந்தாலும், கர்நாடகாவில் அமையவிருக்கும் ஆட்சி,காவிரி ஆற்று
மத நல்லிணக்கத்தின் முன்னோடி குடியாத்தம்..! கோவில் திருவிழாவை முன்னிட்டு மஜக சார்பில் மத நல்லிணக்க தண்ணிர் பந்தல்..!!
வேலூர்.மே.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் 22 வார்டில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அக்காலம் தொட்டு, இக்காலம் வரை இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதில் ஒன்றான நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் #குடியாத்தம்_கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் திருவிழாவிற்கு வந்த ஊர் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் ஜூஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்ததனர். மஜக வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் அவர்கள் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார். மஜக-வினர் சமூக நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் தோழமையுடனும் மக்களிடம் தம்முடைய அன்புச் செயல்களாலும் சேவைகளாலும் செயல்படுவதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_குடியாத்தம்_நகரம் #மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம். 15.05.2018
கத்தாரில் மாரடைப்பால் இறந்த சகோதரர் இளங்கோவன்..! குடுப்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக மாநில பொருளாளர்..!
இராமநாதபுரம்.மே.14., கத்தாரில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரண தருவாயிலிருந்துள்ளது, உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். கத்தார் நிர்வாகிகள் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை அன்று சொந்த ஊருக்கு வரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (13.05.2018) தோழர். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் , நகர செயலாளர் ஷாகுல் ஹமீது,