குதிரை பேரத்திற்கு முற்றுப்புள்ளி.

(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

கர்நாடகாவில் குறுக்குவழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று முயற்சித்த பாஜகவின் கனவில் மண் விழுந்திருக்கிறது .

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 8 MLA களை உருவி , குதிரைப்பேரம் மூலம் கவர்னர் உதவியோடு அவர்கள் போட்ட சதித்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த ‘செக்’ காரணமாக நினைத்தது நடைபெறாமல் போய்விட்டது .

முதலமைச்சராக பதவியேற்ற 56 மணிநேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்யும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் .

இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது . பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி மஜதவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது வரவேற்கதக்கது .

பொதுவில் குமாரசாமி ஒரு அதிர்ஷ்டக்காரர் . அவர் அப்பா தேவகௌடாவை போலவே!

முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஒன்றுபட்ட பழைய ஜனதாதளத்தின் சார்பில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பிரதமர் ஆனார் . அதே அதிர்ஷ்ட காற்று குமாரசாமியின் பக்கமும் திரும்பியுள்ளது .

இவர்களின் கூட்டணி ஆட்சியில் கர்நாடகா வளம் பெற வேண்டும் .

நல்லாட்சி கொடுத்த சித்தராமையாவுக்கே முழுமையான வெற்றியை மக்கள் கொடுக்கவில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும்.

அதுபோல் காவிரி ஆற்று உரிமையில் தமிழ்நாட்டுக்கான நீதியையும் இவர்கள் நிலைநாட்ட வேண்டும் .

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
19.05.2018