வேலூர்.ஜூன்.04., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஆம்பூர் நகருக்கு உட்பட்ட 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் SMD நவாஸ் கலந்து கொண்டனர். இதில் மளிகை தோப்பு நாட்டாண்மை சகோ முனுசாமி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதரர்கள், சகோதர சமுதாயத்தவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் TR. முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M. நிஜாம்முதீன், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஷாயின்ஷ, இம்ரான் நாதிம், மருத்துவ
தமிழகம்
தமிழகம்
தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்…! மாநில பொருளாளர் முன்னிலையில் இணைந்தனர்…!
வேலூர்_கிழக்கு. ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நேற்று 03/06/2018 இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுங்கிலும் கட்சி கொடிகள் பட்டொளி வீசி பறக்க சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் நிகழ்ச்சியின் பதாகைகள் சுவரொட்டிகளும் காணபட்டன. இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் பல்வேறு கட்சிகள் இயக்கங்களை சார்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் படை சூழ்ந்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் மஜக மாநில பொருளாளருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் S.G..அப்சர் சையது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசின், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 04.06.2018
புதுக்கோட்டையில் மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி…!
புதுகை.ஜூன்.04.,புதுக்கோட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் நேற்று 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை அசோக்நகர் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் துரைமுகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர் காரம்பக்குடி ஜான் மாவட்ட துணைச்செயலாளர் N.S.ரெங்கசாமி , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட வர்தகர் அணிசெயலாளர் காதர்மைதீன், கறம்பக்குடி நகரச்செயலாளர் அமீர்அம்ஷா, நகர அவைத்தலைவர் குத்புதீன், ஒன்றிய செயலாளர் அப்துல்லா, இளைஞரணி துணைச்செயலாளர் ஷேக்சுல்தான் அஹமது, புதுகை நகரச்செயலாளர் முஹம்மது அன்சாரி , இளைஞரணி செயலாளர் பாலகுமார், மற்றும் முஹம்மது நியாஸ், முஹம்மது இப்ராகிம், சிராஜூதீன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான சகோதர சொந்தங்களும், மனிதநேய சொந்தங்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் . தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 03.06.2018
பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் பக்குவபடுத்தபட்ட மண்ணில் சமுகநல்லிணக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டும்..! இஃப்தார் நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது உரை..!!
வேலூர்.ஜூன்.04., வேலூர் கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக #சமுக_நல்லிணக்க #இஃப்தார் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாய் நேற்று (03.06.018) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்ரசீது M.com, அவர்கள் களந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளார்களாக #திமுக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்_MLA,#விடுதலை_சிறுத்தைகள்_கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திர குமார், #நாம்_தமிழர்_கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கினைப்பாளர் சல்மான், விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துனை செயலாளர் ஜாபீர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துனை செயலாளர் JM.வசீம்அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் SG.அப்சர் சையத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, ஆகியோர் களந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் குஸ்ரு கௌஸ் மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை செயலாளர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகுக்க, இந்த இஃப்தார் நிகழ்ச்சி M.ஜாஹீர்உசேன், கஸ்பாஏஜாஸ், N.சைய்யதுஉசேன், அமின், சைய்யத்காதர், பட்டேல் ஷமீல், ரிஸ்வான், முஹம்மது சலீம், திருவண்ணாமலை மாவட்ட, நகர நிர்வாகிகள், வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள்
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பு!
நாகை.ஜுன்.04., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சகொல்லை ஊராட்சி பள்ளி வாசல் புதுதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2017-18-ல் இருந்து ரூபாய் 4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 03/06/2018