வேலூர்_கிழக்கு. ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நேற்று 03/06/2018 இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுங்கிலும் கட்சி கொடிகள் பட்டொளி வீசி பறக்க சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் நிகழ்ச்சியின் பதாகைகள் சுவரொட்டிகளும் காணபட்டன.
இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் பல்வேறு கட்சிகள் இயக்கங்களை சார்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களின்
முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் படை சூழ்ந்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் மஜக மாநில பொருளாளருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் S.G..அப்சர் சையது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசின், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
04.06.2018