தோஹா.ஜூன்.04.,கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக கடந்த 01-06-2018 மாலை 5 அளவில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியை கிராத் ஓதி IKP பொருப்பாளர் சைப் பையாஜி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கத்தார் MKP செயலாளர் உத்தமபாளையம் A. முஹம்மத் உவைஸ் தலைமை தாங்கினார்.
கத்தார் MKP பொருளாளர் ஆயங்குடி முஹம்மத் யாசீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மத் வரவேற்புரை வழங்கினார்.
அதைதொடர்ந்து இஸ்லாம் கூறும் மனிதநேயம், நல்லிணக்கம் பற்றி அஷ்ஷேக் S.L ஸியாவுதீன் மதனி (முதுநிலை அழைப்பாளர் FANAAR) அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.
பின்பு ICC கத்தார் தலைவர் திருமதி மிலன் அருன்அவர்கள் பேசும்போது இது போன்று நிகழ்ச்சிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் நடக்கிறது அதை கத்தாருக்கு அறிமுகப்படுத்தி ஒரு #குடும்ப_விழா போன்று திட்டமிடலை செய்த MKP நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
பின்பு பேசிய மஜக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிஃபாயி_ரஷாதி நல்லிணக்கம் பற்றி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அருமையான முறையில் சொற்பொழிவு ஆற்றினார்.
கூட்டம் அரங்கை தினரடித்தது. தன்னார்வளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.
பிறகு இரண்டாம் அமர்வின் துவக்கத்தில் #ICC இணைசெயலாளர் விஜயன் பாபுராஜ் , ஆனந்த (Teysser Motors Manager), #ETA Manager சாமிநாதன் , கத்தார் இளைஞர் தமிழ் சங்க தலைவர் அறந்தை ராஜூ முருகன், காயிதே மில்லத் பேரவை மூத்த நிர்வாகி ஜிப்ரான், கத்தார் பன்னாட்டு செயலாளர் அப்துல் ரசீது வாழ்த்துரை வழங்கினார்.
இறுதி உரையாக நல்லிணக்கத்தை நாம் ஏன் நடைமுறப்படுத்த வேண்டும், மஜகவின் சேவை அரசியல் போன்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக சனையா மண்டல ஆலோசகர் கஃதீர் பாய் நன்றியுரை வழங்கினார்.
இந்த மாபெரும் நிகழ்சிக்கு திட்டமிடலை செய்து , கடினமாக உழைத்து சாதாரனமாக நடக்க வேண்டிய நிகழ்ச்சியை பிரமாண்ட வெற்றி பெறச்செய்த சகோதர்களான கத்தார் MKP ஆலோசகர் கீழக்கரை ஹுசைன், துணைச் செயலாளர்கள் மீசல் செய்யது கனி, புதுமடம் பைஸல் , மாயவரம் பஷீர் அஹ்மத், முத்துப்பேட்டை சமீர் அஹ்மத், IT wing செயலாளர் கொள்ளாபுரம் அஸார் , தோஹா மண்டல செயளாளர் பொதக்குடி புர்கான் , சனையா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் , பொருளாளர் ஒளியுள்ளா. துஹைல் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் நெல்லை ஷாஹுல் ஹமீத் ஆகியோருக்கு மஜக மாநில நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை_கத்தார்
03.06.2018