You are here

நெல்லை மாவட்டம் சார்பாக இலவச ஆயுர்வேத கேரள மருத்துவ சிகிச்சை முகாம்..!

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் சஞ்சீவினி ஆயுர்வேத மருத்துவமனை இணைந்து பேட்டை பகுதியில் இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது.

மஜக பேட்டை நகர செயலாளர் ஐ.டி.ஐ. சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மருத்துவசேவை அணி துணை செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டல தலைவர் திருமதி செ.மகேஸ்வரி இம்முகாமை துவங்கி வைத்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.அல்லாபிச்சை, மஜக மாவட்ட துணை செயலாளர் N.அப்பாஸ், திமுக வட்ட செயலாளர் திரு. தர்வேஸ்மைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் தேவை உள்ளவர்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துக்கள், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கபட்டன,

நூற்றுகணக்கானோர் பயணடைந்த இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முகம்மது மூசா, IT WING செயலாளர் முகம்மது அலி, மாநகர செயலாளர் அசரப் அலி மற்றும் நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Top