மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் மஜக விவசாயி அணி மாவட்ட செயலாளர் லியாக்கத் அலி அவர்களின் மகனும், புருணே மண்டல நிர்வாகி ஹாஜி அவர்களின் சகோதரருமான மணமகன் முகம்மது ஆஷிக் அவர்களுக்கும், மணமகள் ஷாகினா பர்வீன் அவர்களுக்கும் நீடூரில் இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் மணமக்களை வாழ்த்தி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசினார்.
அவரது உரையிலிருந்து…
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு பிரிவினை அரசியலை ஒன்றிய பாஜக அரசு கையிலெடுத்திருக்கிறது.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்ற அவர்களது கொள்கை தேச விரோதமானது.
நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா மூலம் ஆழம் பார்க்கிறார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
அவருக்கும், இதை எதிர்த்த மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
பொது சிவில் சட்டம் என்பது பல மத, இன கலாச்சாரங்களை கொண்ட நம் நாட்டுக்கு பொருந்தாது.
இங்கு முஸ்லிம்கள் திருமணம், சொத்து பிரிப்பு, வழிபாடு ஆகியவைகளுக்கு மட்டுமே ஷரியத் சட்டத்தை பின்பற்றுகிறார்கள்.
மற்ற அனைத்திலும் எல்லோருக்கும் பொதுவானதேயே பின்பற்றுகிறார்கள்.
மற்ற மதத்தினருக்கும் இத்தகைய சலுகைகள் உண்டு.
பர்மா, பங்ளாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலும் அங்கு வாழும் மத சிறுபான்மையினருக்கு இத்தகைய சட்ட சலுகைகள் உள்ளது.
நமது நாட்டில் ஒரே மதத்தில் இருக்கும் மக்களிடையே பலவகை திருமண முறைகள் இருக்கிறது.
மாநிலத்திற்கு, மாநிலம் வேறு படும் பண்பாடுகளும், வழிபாடுகளும் இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பண்பாடு.
எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. தேவையற்றது.
ஒரு சாரரின் தனிப்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகளில் தலையிடக் கூடாது.
சர்ச்சைகள் மூலம் மக்களை பிரிப்பதும், சிறுபான்மையினரை தனிமைப்படுத்திட முயல்வதும், பெரும்பான்மைவாதத்தை வாக்குகளாக்க மாற்ற நினைப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 18 மாதங்களில் வர உள்ளது.
சாதனைகளை கூறி வாக்குகளை கேட்க முடியாது என்பதால், சர்ச்சைகளை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறார்கள்.
இவர்கள் விஷயத்தில் ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு நீடூர் – நெய்வாசல் ஜமாத்தினர், பிரமுகர்களையும் சந்தித்து பேசினார்.
முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்ட பொறுப்பாளர் ஹாஜா சலீம் அவர்களை வானதிராஜபுரம் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
அப்போது மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான நாகை முபாரக் அவர்களும் உடனிருந்தார்.
நீடூர் நிகழ்வில் MJTS மாநில துணை செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் நீடூர் ரியாசுதீன், கோவை மாவட்ட துணை செயலாளர் ஹனிபா, ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், கிளை செய்லாளர் அப்துல் மாலிக் பொருளாளர் சல்மான், மருத்துரணி செயலாளர் பகத் மாணவர் இந்தியா செயலாளர் ஜாசிப்.சமிஹூதீன், IKP செயலாளர் ரபீக் கிளை நிறுவாகிகள் அமீன், தாஜிதீன், அக்பர், அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.