சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகனாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு தங்கள் சமுதாய கோரிக்கைகளை கொடுத்தனர். MBC பிரிவில் தங்கள் சமுதாயத்தை சேர்க்க, சட்டபையில் பேசும் படி கோரிக்கை விடுத்தனர். இதற்குரிய பணிகளை மேற்கொள்வதாக பொதுச்செயலாளர் வாக்குறுதி கொடுத்து, அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING 20.07.2017
சட்டமன்றம்
நாகை அரசு மருத்துவமனையில் தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு!
நாகை. ஜூலை.20., நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஒரு வருடத்தில் அவர் இங்கு ஆய்வு மேற்கொள்வது இது ஐந்தாவது முறையாகும். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் Dr.முருகப்பன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியேர்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விசாரித்தார். MRI ஸ்கேன் உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தந்ததர்காக அவர்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் MLA நிதியிலிருந்து குடிநீர் சுத்தகரிப்பு செய்து கொடுத்த காரணத்தால், மருத்துவமனையில் தற்போது 30 இடங்களில் குடிநீர் குடுவைகள் நோயாளிகள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு தவறுகள் நடைபெறாத அளவுக்கு பணிகள் நடைபெறுவதையும் சுட்டி காட்டினர். பிறகு MLA அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, பிறந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பிரசவ பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். பிறகு நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். விஜயலெட்சுமி என்ற பெண்மணி மருத்துவமனை சுத்தமாக இருப்பதாகவும், துர்நாற்றம் இல்லையென்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் கவனித்து
MLA-க்களுக்கு சம்பள உயர்வு! தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்பு!
சென்னை.ஜூலை.19., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் 16வது சட்டப்பேரவையில் முதன் முதலாக குரல் கொடுத்தார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடரிலும், 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவை மானியத் கூட்டத்தொடரிலும் இது குறித்து விரிவாக பேசினார். பிற மாநிலங்களில் இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மகாராஷ்டிரா, தெலுங்கான, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றரை லட்சத்தை தாண்டி சம்பளம் கொடுக்கப்படுவதையும், அருகில் உள்ள புதுச்சேரியில் கூட அறுபதாயிரம் மேலும் சம்பளம் கொடுக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். சம்பளம் நிறைவாக கொடுத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்-வான்- யூ அவர்களின் கருத்தையும் எடுத்துரைத்தார். இதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றனர். தொகுதி மக்களின் கோரிக்கைகளை செயல்படுத்தவும், தேவைக்கேற்ப திட்டப் பணிகளை நிறைவேற்றவும் தொகுதி நிதியை உயர்த்தி ஒதுக்க வேண்டும் என்றும். கேரளாவில் வருடத்திற்கு 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இக்கோரிக்கை வலுப்பெற்று இக்கூட்டத் தொடரில்
உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும்!
சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே; உலக அளவிலே அடுத்த நூறு ஆண்டுகளிலே அழியும் மொழியின் வரிசையிலே தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக UNESCO அமைப்பு எச்சரித்திருக்கின்றது. இந்த நிலையிலே, சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை தவிர்த்து, இதர மொழி ஆய்வு மையங்களை அந்தந்த மாநில மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டு வர NITI Aayog பரிந்துரைத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் இந்த நிர்வாகத்தின் நிதியோடுதான் நடைப்பெற்று வருகின்றன. பழந்தமிழ் நூல்களை, ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டமும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. சமஸ்கிருதத்திற்கு உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை தொடங்க உதவும் மத்திய அரசு, தமிழை பாதுகாக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தலையிட்டு, தமிழை பாதுகாக்க
தமிழக முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு!
#தமிழக_முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு! (நீட்தேர்வு, கதிராமங்கலம், கம்பம் வழக்கு, சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக) இன்று (18.7.17) மதியம் 3 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் முதல்வர் அறையில் சந்தித்தனர். NEET தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய முன் முயற்சிகள் குறித்து மூவரும் கருத்து தெரிவித்து, அது தொடர்பாக மாணவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். உடனே அதற்கு நாளையே சந்திக்கலாம் என ஒப்புக் கொண்டார். பிறகு MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வது குறித்து மீண்டும் நினைவூட்டினர். அது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என முதல்வர் பதிலளித்து நம்பிக்கையூட்டினார். கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குள் வாபஸ் பெற வேண்டும் என்றதற்கு, அங்கு நிலைமை சுமூகமாகி வருகிறது. நிலைமை சீரானதும் வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். பிறகு, தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து