நாகை. ஜூலை.20., நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஒரு வருடத்தில் அவர் இங்கு ஆய்வு மேற்கொள்வது இது ஐந்தாவது முறையாகும். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் Dr.முருகப்பன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியேர்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விசாரித்தார்.
MRI ஸ்கேன் உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தந்ததர்காக அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் MLA நிதியிலிருந்து குடிநீர் சுத்தகரிப்பு செய்து கொடுத்த காரணத்தால், மருத்துவமனையில் தற்போது 30 இடங்களில் குடிநீர் குடுவைகள் நோயாளிகள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு தவறுகள் நடைபெறாத அளவுக்கு பணிகள் நடைபெறுவதையும் சுட்டி காட்டினர்.
பிறகு MLA அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, பிறந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பிரசவ பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். பிறகு நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். விஜயலெட்சுமி என்ற பெண்மணி மருத்துவமனை சுத்தமாக இருப்பதாகவும், துர்நாற்றம் இல்லையென்றும்,
மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் கவனித்து கொள்வதாகவும் கூறினார். எதற்கெடுத்தாலும் பணம் கேட்கும் பழக்கம் இங்கு இல்லை என்றும் கூறினார்.
இன்னொரு பெண்மணி கூடுதல் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை உடனே நிறைவேற்றுவதாக MLA அவர்கள் கூறினார்.
மகப்பேறு மருத்துவர்கள் உட்பட கூடுதலாக 10 மருந்துவர்கள் நியமிக்கபட்டால் நோயாளிகளின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்றை கருத்தை குறித்து கொண்டார். இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளதாகவும், விரைவில் இப்பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூறினார்.
பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மருத்துவமனையின் சிறப்பான பணிகளை பாராட்டிவிட்டு, அங்கு கேட்டறிய பட்ட குறைகள் விரைவில் களையப்படும் என்றும், பிரசவ வார்டில் விதிமீறல் குற்றசாட்டிற்க்கு ஆளான நான்கு பேர் பனியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும். குற்றசாட்டிற்க்கு ஆளாகமல் மற்றவர்கள் பணி செய்ய வேண்டும் என எச்சரிக்கையுடன் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தகவல்,
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நாகை.
20.07.17