மஜக பொதுச் செயலாளருடன் செட்டியார் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!

image

image

image

சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,  அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர்.

24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகனாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு தங்கள்  சமுதாய கோரிக்கைகளை கொடுத்தனர்.

MBC பிரிவில் தங்கள் சமுதாயத்தை சேர்க்க, சட்டபையில் பேசும் படி கோரிக்கை விடுத்தனர். இதற்குரிய பணிகளை மேற்கொள்வதாக பொதுச்செயலாளர் வாக்குறுதி கொடுத்து, அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்..

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
20.07.2017