(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது. சென்னை - மகாபலிபுரம் - பாண்டிச்சேரி - காரைக்கால் - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - தொண்டி - இராமநாதபுரம் - கீழக்கரை - தூத்துக்குடி - காயல்பட்டினம் - கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய - மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் . இதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக
அறிக்கைகள்
ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி
ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு மஜக ஆதரவு.
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை) இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீராகுமார் அவர்களை தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தூதர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும், முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்பதும், இவர் தகுதிமிக்க வேட்பாளர் என்பதை நிரூபிக்கிறது. இந்திய அளவில் தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவரை குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 23.06.2017
அவர்களுக்காக பிரர்த்திக்கிறோம்…
கோவை நிவாரண நிதி தொடர்பான ஒரு வழக்கில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட தமுமுக தலைவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். அவ்விஷயத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்து, வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் தைரியத்தோடு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெற்றிபெற இறைவனிடம் பிரர்த்திக்கிறோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 19.06.2017
CPM அலுவலகம் தாக்கப்பட்டது மதவெறியின் தொடர்ச்சி! மஜக கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்து வரும் CPM கட்சியின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாத மதவெறி சக்திகள், தங்களது வழக்கமான வன்முறையை கையில் எடுத்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் அரசியல் வன்முறைகள் பெருக இடம் அளிக்க கூடாது. இவ்விஷயத்தில் தமிழக மக்கள் உறுதியான மனநிலையில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 18/06/2017