(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை) மதுரை அருகே அந்நஜாத் பத்திரிக்கையின் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் நேற்று முற்பகல் நடைப்பெற்ற சாலை விபத்தில் இறந்திட்டார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. (இன்னாலில்லாஹி) 1980-களில் மத்தியில் தொடங்கிய ஏகத்துவ பரப்புரையில் தீவிரமாக இயங்க தொடங்கி, கடைசிவரை அந்த மாத இதழின் பெயரே ஒருக்கட்டத்தில் அதன் பிரச்சாக்காரர்களுக்கு புனைப்பெயரால் மாறியது. அறிவியல் ரீதியாக பிறைக் காலன்டரை முன்னிறுத்தும் பணியை மறைந்த சகோதரர் செங்கிஸ்கானுடன் இணைந்து முன்னெடுத்தார். கொள்கைப் பிரச்சாரராக மட்டுமின்றி, அவர் வணிகத்திலும் ஈடுபட்டு, யாருடைய தயவுமின்றி பணியாற்றினார். அதைத்தான் மிகவும் விரும்பினார். அவரோடு நாலைந்து சந்திப்பும் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அவரது பல நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர் ஒரு துணிச்சல் மிக்க ஊழியர் என்ற அடிப்படையில் அவர்மீது மரியாதை இருந்து வந்தது. அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது. அவரது மறுமையில் வாழ்வு சிறப்புற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 13.7.17. (இன்று நடைபெறும் ஜனஷா தொழுகையில் மஜக இணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி அவர்கள் பங்கேற்கிறார்).
அறிக்கைகள்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்…! மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். காஷ்மீரில் நடைபெறும் மண்ணுரிமைக்கான அரசியல் போராட்டம் இது போன்ற பயங்கரவாத செயல்களால் திசைமாற்றப்படுவது வேதனையளிக்கிறது. இதனை பெரும்பாலான காஷ்மீர் மக்கள் விரும்பாத போதும், பயங்கரவதிகளால் அவர்களின் பாரம்பரிய பெருமையும் , சமூக ஒற்றுமையும் சீர்குலைய அவர்கள் அனுமதிக்க கூடாது. அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் அச்சம்பவத்தில் இதர பக்தர்களை தனது சாமர்த்தியமான திறமையால் பாதுகாத்த பேருந்து ஓட்டுநர் சலீம் அவர்களை மனதார பாராட்டுகிறோம். அவர் இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளங்களை பேணிப் பாதுகாத்திருக்கிறார். இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 12.07.2017
ஞானையா மரணம்! வரலாற்று ஆய்வாலரை இழந்திருக்கிறோம்..! மஜக இரங்கல்…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) முதுபெரும் இடது சாரி இயக்க ஊழியரும், வரலாற்று ஆய்வாளரும், பன்னூல் ஆசிரியருமான டி.ஞானையா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழமான வருத்தங்களை அளிக்கிறது. இளம் வயது முதல் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனைத்துக்கொண்டு அதில் செயல்வீரராகவும், சிந்தனையாளராகவும் இயங்கினார். ஜனசக்தியில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைவருக்கும் அரசியல் பாடங்களாக இருந்தன. அவர் எழுதிய நூல்கள் யாவும் வரலாற்று மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளாக இருந்தன. இந்திய முஸ்லிம் சமுதாயம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அனைவரும் ஆய்வு செய்யகூடிய அரிய தொகுப்புகளாக இருக்கின்றன. அவரது மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும் நூலக உலகிற்கும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து குடும்பத்தினர்கள், மற்றும் தோழர்கள் அவரது வாசகர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனித நேய ஜனநாயக கட்சியும் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறது. இவன் M.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09/07/2017
புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகப் படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) யூனியன் அந்தஸ்து பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் அரசியல் குழப்பங்கள் நாட்டையே அதிர்சியில் ஆழ்த்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செய்து வரும் நடவடிக்கைகள் கடும் கண்டணத்திற்குரியதாகும். பச்சையாக சொன்னால் மத்திய அரசின் துணையோடு அரசியல் ரவுடித்தனங்களை அவர் அரங்கேற்றி வருகிறார் என்பதுதான் உண்மையாகும். மத்திய அரசு, இரட்டை தலைமைத்துவத்தை உருவாக்கி ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்பது ஜனநாயக படுகொலையாகும். உச்சகட்டமாக அங்கு மத்திய அரசு மூன்று பேரை நியமன உறுப்பினர்களாக மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததும், அதற்கு ஆதரவாக கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பதும் புதுச்சேரி மாநில மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் சர்வாதிகார போக்குகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் உரிமைகளையும் அழிக்க நினைப்பது இந்திய அரசியலை சீர்குலைக்கும் போக்கு என்பதில் ஐயமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் அத்துமீறல்களுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும்,
ஏழை தாயின் சாபம் சும்மா விடாது…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வட இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பாமர வட இந்திய இந்து சகோதரர்களை தீவிர இந்துத்துவ வெறியர்களாக்கும் முயற்சியில் காவி மதவெறியர்கள் வெற்றி பெற்று வருகிறார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. கடந்த 1 வாரமாகவே மனசு சரியில்லை. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜுனைத் என்ற பதினாறு வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை கண்ணீரை சிந்த வைத்து விட்டது. அவன் இளம் வயதில் தந்தையை இழந்து, கூலி வேலை செய்யும் விதவை தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். நோன்பு வைத்துக் கொண்டு, பெருநாளைக்கு புத்தாடை வாங்க, தன் ஏழைத்தாய் சேகரித்த பணத்திலிருந்து 1500 ரூபாயை வாங்கிக் கொண்டு ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டான். தன் அருமை புதல்வன் தனக்கும் சேர்த்து புத்தாடை வாங்கி வருவான், நோன்பை துறப்பதற்கு வீட்டிற்கு வந்து விடுவான் என காத்திருந்த அந்த ஏழை விதவைத் தாய் ஏமாந்து போனாள். அந்தோ...பரிதாபம்! அந்த நோன்பாளியை, ரயிலில் வந்த 'பசு காவலர்கள்' என்ற போர்வையில் திரியும் மதவெறிக் கும்பல், காரணங்களே இன்றி ஜுனைத்தை 'மாட்டுக்கறிக்கு ஆதரவாளன்' என்று