(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை) நெல்லை மாவட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் (ISRO CENTRE) அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பல கிலோ மீட்டர் தொலைவில் வெடிச்சத்தம் கேட்டதாக சுற்று வட்டார மக்கள் உணர்ந்துள்ளனர். அப்பகுதியில் பாறை பிளவுகள் ஏற்ப்பட்டதாக செய்தியை அறிந்த புதிய தலைமுறை ஊடகவியலாளர் ராஜாகிருஷ்ணன் அவர்களும், தினகரன் செய்தியாளர் ஜெகன் அவர்களும் அப்பகுதிக்கு சென்று செய்தியை சேகரித்து வெளியிட்டுள்ளனர். மகேந்திரகிரி மலையில் வெடிப்பு சத்தம் கேட்ட தகவல் உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அவர்கள், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்திய போது, மத்திய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே வழக்குகளை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தமிழக ஆட்சியாளர்கள் மீது ஐயத்தையும், அதிர்ச்சியைம் ஏற்ப்படுத்தியுள்ளது. இது விஷயமாக ஊடகவியாளர்கள்
அறிக்கைகள்
கீழடி அகழ்வாய்வு பணிகள் தொடர வேண்டும்…! மஜக வேண்டுகோள்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழர்களிடையே கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் 2 ஆயிரம் ஆண்டு கால பாரம்பர்யத்தையும், வரலாற்றையும் துல்லியமாக எடுத்துக்கூறும் ஆதாரங்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிலருக்கு பிடிக்கவில்லை. அதன் விளைவாகவே தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அங்கு சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்ந அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரை இடமாற்றம் செய்தனர். தற்போது திட்டமிட்டே அப்பணிகளில் தொய்வுகளை ஏற்படுத்தி, அகழ்வாராய்ச்சிப் பணியை இழுத்து மூடும் சதியை செய்துவருகின்றனர். அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். எனவே கீழடியில் உள்ள 110 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் நியமாக நடைபெறச் செய்ய, மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை இப்பணியில் நியமிக்க, மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் கீழடி கண்டுப்பிடிப்புகளை சேகரித்து அங்கு ஒரு அருங்காட்சியகம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்:- #M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26.09.2017
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்! தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை) அதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில்,TTV தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர் ,இதுபோல தான் நடவடிக்கை வரும்"என்று சொல்லியிருந்தார்.அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 MLA க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள். இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்_20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது. #ஜனநாயக_படுகொலையாகும். மத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். #கூடா_நட்பு_கேடாய்_முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும்,தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18_09_17
தமிழக மாணவ, மாணவிகளிடையே சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்..!! மாணவர் இந்தியா கண்டனம்..!!
(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை...) தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் வரை தகுதி படைத்த நபரே தலைவராக இருந்துள்ளனர்.இதற்கு மாறாக தற்போது தமிழக சாரண-சாரணிய இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா வை நியமிக்க தமிழக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. விதிகளை மாற்றி அரசியல் சார்புடைய ஒருவரை,மத்திய அரசின் வாரிய பதவி வகிப்பவரை தலைவராக நியமிக்க முயற்சி செய்வது தமிழக மாணவ-மாணவிகளிடையே பாசிஸ சிந்தனையை புகுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. மேலும் இதுபோன்ற பதவிகளில் தகுதி படைத்த சகிப்புத்தன்மையுடையவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவண், A.முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 12.09.17
அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்..! மஜக வேண்டுகோள்.!!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்துவிட்டு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டொ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், அவர்களை அழைத்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலை நிறுத்தத்தை முறியடிப்பதில் கவனம் செலுத்தாமல், அவர்களோடு சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவன். M. தமிமுன் அன்சாரி MLA, 12.09.17