கோவை.ஜுலை.30., கோவையில் நடைபெற்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக பல அரிய கருத்துகளை கூறி பொதுமக்களின் உள்ளங்களை தொட்டிருக்கிறார். அவர் பேசியதாவது ... இன்று (29.07.18) காலை அமைச்சர் இங்கு வரும் போது செண்டு மேளம் அடித்து வரவேற்றது தேவையற்றது. இனி இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்தல் நேரங்களில் மட்டும் தான் இது போன்ற விஷயங்கள் கூட்டணி கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து இனி மஜக சொந்தங்கள் செயல்பட வேண்டும். என்னை இளம் காயிதே மில்லத் என அன்பு மிகுதியால் சிலர் சொன்னார்கள். அவரின் புகழ் நிழலில் கூட எங்களால் நெருங்க முடியாது. இது தான் உண்மை. காயிதே மில்லத் தூக்கி ஓடிய ஜோதியை, அப்துல் சமது சாகிபும், பிறகு அப்துல் லத்தீப் சாகிபும் தூக்கி ஓடினார்கள். இப்போது நாங்கள் தூக்கி ஒடுகிறோம். அவர்களது பாடங்களையும் ., செயல்களையும் தான் நாம் பின்பற்றுகிறோம். எனவே எங்களுக்கு புனித பிம்பங்களை போர்த்தாதீர்கள். நாங்கள் சாமானியர்கள். பலம்., பலகீனம், கோபம், சாபம், குறைகள், நிறைகள் கொண்ட சராசரிகள்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..! மஜக தலைவர்கள் பங்கேற்பு..!!
சென்னை.ஜூலை.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம் கடந்த (27/07/2018) வெள்ளிக்கிழமை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பால்பூத் பகுதியில் நடைபெற்றது. இக்கொள்கை விளக்கக் கூட்டத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் I.இப்ராஹீம் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் S.அன்வர் இப்ராகிம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் P.M.சாகுல் ஹமீது அவர்களும் வரவேற்புரை நடத்தினர். இக்கூட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா, ஜே.சீனி முஹம்மது, கொள்கை விளக்க பேச்சாளர் ஜே.எஸ் மீரான் அவர்களும் மத்திய அரசுக்கு எதிராகவும், நாட்டில் நடக்கும் பாசிஸ அரசியல் குறித்தும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கொள்கை விளக்க கூட்டத்தில் இறுதியாக பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல்நிலை பூரண குணமடைந்து சீக்கிரம் தமிழக மக்கள் மத்தியில் " என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே " என்ற வார்த்தை கேட்க பிரார்த்தனை செய்கிறோம், மற்றும் மத்திய பிஜேபி அரசு கபட நாடகத்தை பற்றி தெளிவாக
மஜக தலைவர்கள் தா.பாண்டியன் உடல் நலன் விசாரிப்பு.!
சென்னை.ஜூலை.28., சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள #இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி-யின் (#CPI)மூத்த தலைவர் #தா_பாண்டியன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA, மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீத், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் #ஏ_எஸ்_அலாவுதீன் ஆகியோர் சந்தித்தனர். அனைவரையும் வரவேற்ற தா.பாண்டியன் அவர்கள், நான் நலம் பெற்று வருவேன் என்று உற்சாகத்துடன் பேசினார். பிறகு அங்கு வந்த #தமுமுக பொதுச்செயலாளர் #ஹைதர்_அலி அவர்களை மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
கலைஞர் உடல் நலன்! காவேரி மருத்துவமனைக்கு மஜக தலைவர்கள் வருகை..!!
சென்னை.ஜூலை.28., இன்று சென்னை காவிரி மருத்துவமனைக்கு #கலைஞரின் உடல் நலம் விசாரிக்க #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் #A_S_அலாவுதீன் , ஆகியோர் வருகை தந்தனர். அவர்களுடன் #தனியரசு_MLA, #கருணாஸ்_MLA ஆகியோரும் வருகை தந்தனர். #திமுக MLAக்கள் செந்தில், எழில், மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும், T.K.S.இளங்கோவன் அவர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர். சந்திப்புக்குப் பிறகு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து #கலைஞர் நலம் பெற, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
ஆவடி நகர பொருளாளர் இல்ல திருமண விழா மஜக மாநில பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
சென்னை.ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆவடி நகர பொருளாளர் நாகூர் மீரான் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று (16/07/2018) ஆவடி பட்டாபிராம் வசந்த மஹாலில் நடைபெற்றது.. இத்திருமண நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் A.செய்யது அபுதாகிர், பூவை அப்துல் காதர், மண்ணிவாக்கம் முஹம்மது யூசுப் தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் ஹமீது , பூந்தமல்லி நகர செயளாலர் யாசர் அரபாத், ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, அதிமுக நகர செயலாளர் R.L.தீனதயாளன் , விசிக ஆவடி நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் AVK.அர்ஜூன் மற்றும் நகர , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம் 16.07.2018