You are here

ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!

ஈரோடு: பிப்ரவரி.05., ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 56, இறந்ததாகவும், அவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை தொடர்ந்து மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக், அவர்கள் தலைமையில் இறந்தவர் உடலை உலக சுகாதார மையம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் செய்யும் மகத்தான இப்பணிக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
05.02.2022

Top