சிவகங்கை.ஆக்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் இளையான்குடி நகர அலுவலகத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்களையும், மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா. நாசர் அவர்களையும், இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியின் சிறந்த கல்வியாளரும் தாளாளருமான ஹாஜி.சேக்தாவூத் அவர்களும், தலைமையாசிரியர் பெரியசாமி அவர்களும், பள்ளி நிர்வாகிகள் புரோஸ்கான் மற்றும் தமீம் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பள்ளியின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினார்கள். இந்த சந்திப்பின் போது மஜக மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் செயலாளர் உமர் கத்தாப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், நகர் துணைச் செயலாளர் செய்யது மஹபுப், சிராஜுதீன் அஹமது, ஜகுபர் சாதிக், உஸ்மான் ஆகியோர் உடனிருந்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சிவகங்கை மாவட்டம். 11.08.2017.
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
கம்பம் பெரியபள்ளி ஜமாத் தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு!
தேனி. ஆக.11.,கடந்த சில தினங்களாக தேனி மாவட்டம் முழுதும் கட்சி சுற்றுபயணத்தில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள், கம்பம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து ஜமாத் தலைவர் பாவா ஃபதுருதீன் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் அரசியல் நிகழ்வு மற்றும் பொதுவாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பு மிக்க மகிழ்சியை தந்தது. இச்சந்திப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் களந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 10.08.2017
சகோ.தாரிக் அவர்கள் நல்லடக்கத்தில் மஜக மாநில பொருளாளர்.
தேனி.ஆக.10., தமுமுகவின் முன்னாள் தேனி மாவட்ட பொருளாளர் சகோ.தாரிக் அவர்கள் நேற்று 09/08/17 இரவு வபாத்தானார்கள். தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் தாரிக் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அவரின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், கம்பம் தன்விர் மற்றும் தேனி மாவட்டச் செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், துணைச் செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், ஜாஃபர், காதர், கம்பம் நகரசெயலாளர் அயூப்கான், மருத்துவ சேவை அணிச் செயலாளர் லியாகத் அலி, கம்பம் நகர நிர்வாகிகள், பெரியகுளம் நிர்வாகிகள், கேளம்பாக்கம் அன்வர், இளையான்குடி முத்து முஹம்மது, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம் 10.08.17
மஜக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தேனி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கேரளா ராமக்கல்மெட்டு பகுதியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர், கம்பம் தன்விர், மாநில துணை பொதுசெயலாளர் மன்னை செல்லசாமி, ஊடகபிரிவு துனை செயலாளர் சிக்கந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம் ஆகியோருடன் தேனி, கம்பம், பெரியகுளம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கம்பம், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் பல பகுதிகளிள் புதிய நிர்வாகிகளை இனைப்பது கட்சி கொடிகளை அனைத்து பகுதிகளிலும் ஏற்றுவது மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சியை பலபப்டுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 09.08.17
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரத்தில் மஜக கொடியேற்றம்…! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தேனி. ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காவல்துறையின் பல எதிர்புகளை தாண்டி மஜகவின் கொடி ஏற்றபட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். மற்றும் உத்தமபாளையத்தில் மேலும் பல இடங்களில் கொடியேற்றம் நடத்துவதற்கு காவல்துறைஅனுமதி தரமறுத்த இடங்களை ஆய்வு மேற்கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அனுமதி வாங்கி தருவதாக கூறினார். பிறகு தேனி மாவட்டம் மஜக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் செய்து நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கினார். அதன்பின் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார். இந்த கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்தை மஜக தேனிமாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில துனை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட நிர்வாகிகள் காதர், தமீம், ஷேக், ஷபிர், காதர் (Western mobile), உத்தமபாளையம் நகர செயலாளர் உபைதுர் ரஹ்மான், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், மருத்துவ அணி லியாகத் அலி ஆகியோர், மேலும்