தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரத்தில் மஜக கொடியேற்றம்…! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

image

image

image

தேனி. ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காவல்துறையின் பல எதிர்புகளை  தாண்டி மஜகவின் கொடி ஏற்றபட்டது.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மற்றும் உத்தமபாளையத்தில் மேலும் பல இடங்களில் கொடியேற்றம் நடத்துவதற்கு காவல்துறைஅனுமதி தரமறுத்த இடங்களை ஆய்வு மேற்கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அனுமதி வாங்கி தருவதாக கூறினார்.

பிறகு தேனி மாவட்டம் மஜக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் செய்து நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கினார். அதன்பின்  நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார்.

இந்த கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்தை மஜக தேனிமாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாநில துனை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன்,

மாவட்ட நிர்வாகிகள் காதர், தமீம், ஷேக், ஷபிர், காதர் (Western mobile), உத்தமபாளையம் நகர செயலாளர் உபைதுர் ரஹ்மான், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், மருத்துவ அணி லியாகத் அலி ஆகியோர்,

மேலும் இதில் தேனி, உத்தமபாளையம், கோம்பை, கம்பம் பகுதி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தேனி மாவட்டம்
07.08.17