You are here

காயல் தபால் நிலையம் இடமாற்ற விவகாரம்..! மஜக மாநில பொருளாளரிடம் காயல் சமூக ஆர்வலர்கள் மனு..

image

image

image

தூத்துக்குடி.ஆக.21., காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடம் ஒன்றில் – தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை வாடகை அடிப்படையில் வழங்கிட நகராட்சியிடம் தபால்துறை கேட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி பொதுமக்கள், ஜமாத்துக்கள், கோவில்-தேவாலயங்களின் நிர்வாகிகள்_ ஆகியோரிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்கள் அடங்கிய மனு – நகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி MLA அவர்களை  “காயல்பட்டினம் நடப்பது என்ன?” குழுமம் சார்பாக நேற்று சென்னையில் நேரில் சந்தித்து – ஆகஸ்ட்-16 அன்று மஜக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனு குறித்து நேரில் வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா  உடனிருந்தார். இது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியை விரைவில் நேரடியாக சந்தித்து பேசுவதாக தமீமுன் அன்சாரி MLA உறுதியளித்தார்.

மேலும் – கட்சி பணி நிமித்தமாக நேற்று காயல்பட்டினம் வந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது அவர்களை “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் சந்தித்து பேருந்து  நிலைய வளாகத்தில் உள்ள காலியிடங்களை நேரடியாக காண்பித்தனர்.

தபால் நிலையத்தினை அமைத்திட குறைந்தது 5 இடங்கள் உள்ளன என்பதும் அவர்களிடம் விளக்கப்பட்டது.  இடங்களை பார்வையிட்ட S.S.ஹாரூன் ரசீது அவர்கள் இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா,
தூத்துகுடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் அஹமது மீராதம்பி ஆகியோருடன்,

மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது நஜிப், காதர் பாஷா, மாவட்ட தொழிர்சங்க செயலாளர் ராசிக் முசமில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஃபிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், துபாய் மண்டல நிர்வாகி முஹம்மது சபிர்,
மற்றும் காயல் நகர நிர்வாகிகள் ஜிபிரி, மீரான், ஜியாவுதீன், யூசூப், மொஹதும், ஜரித்மன்சூர், மொஹூதூம், அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
காயல்பட்டினம் நகரம்.
20.08.17

Top