கம்பம் பெரியபள்ளி ஜமாத் தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு!

image

தேனி. ஆக.11.,கடந்த சில தினங்களாக தேனி மாவட்டம் முழுதும் கட்சி சுற்றுபயணத்தில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள்,

கம்பம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து ஜமாத் தலைவர் பாவா ஃபதுருதீன் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் அரசியல் நிகழ்வு மற்றும் பொதுவாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பு மிக்க மகிழ்சியை தந்தது.

இச்சந்திப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன்,

மாவட்ட செயலாளர்  கம்பம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் களந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தேனி மாவட்டம்.
10.08.2017