தூத்துக்குடி.ஆக.21., இரு தினங்களாக தூத்துகுடி மாவட்டதில் கட்சியின் சுற்றுபயணதில் உள்ள மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள். நிகழ்ச்சின் ஒருபகுதியாக நேற்று 20.08.17 காயல்பட்டினம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கொடியேற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன், தூத்துகுடி தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது நஜிப், காதர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி ரஃபிக், MJTS மாவட்ட செயலாளர் ராசிக் முசாமில், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், துபை மண்டல நிர்வாகி முஹம்மது சபிர் ஆகியோர், காயல் நகர செயலாளர் ஜிப்ரி, பொருளாளர் மீரான், நகர துனை செயலாளர்கள் ஜியாவுதீன், மொகதும், யூசூப், நகர இளைஞரனி மொகதும், மீனவர் அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 21.08.17
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
காயல் தபால் நிலையம் இடமாற்ற விவகாரம்..! மஜக மாநில பொருளாளரிடம் காயல் சமூக ஆர்வலர்கள் மனு..
தூத்துக்குடி.ஆக.21., காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடம் ஒன்றில் - தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை வாடகை அடிப்படையில் வழங்கிட நகராட்சியிடம் தபால்துறை கேட்டுள்ளது. இதனை வலியுறுத்தி பொதுமக்கள், ஜமாத்துக்கள், கோவில்-தேவாலயங்களின் நிர்வாகிகள்_ ஆகியோரிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்கள் அடங்கிய மனு - நகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி MLA அவர்களை "காயல்பட்டினம் நடப்பது என்ன?" குழுமம் சார்பாக நேற்று சென்னையில் நேரில் சந்தித்து - ஆகஸ்ட்-16 அன்று மஜக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனு குறித்து நேரில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா உடனிருந்தார். இது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியை விரைவில் நேரடியாக சந்தித்து பேசுவதாக தமீமுன் அன்சாரி MLA உறுதியளித்தார். மேலும் - கட்சி பணி நிமித்தமாக நேற்று காயல்பட்டினம் வந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது அவர்களை "நடப்பது என்ன?" குழும நிர்வாகிகள் சந்தித்து பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடங்களை நேரடியாக காண்பித்தனர். தபால் நிலையத்தினை
மஜக தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு.!
தூத்துக்குடி.ஆக.20., இன்று மனிதநேய ஜானநாயக கட்சியின் தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் காயல்பட்டினம் நகரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் நஜிப் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிபணிகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 20.08.17
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…!
தூத்துக்குடி.ஆக.16., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருலாளர் அ.நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் M.காதர் பாட்ஷா, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் S.முகம்மது ராபிக் முன்னிலையில் நடைபெற்றது. எதிர்வரும் 20.08.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு வருகைதரும் மாநில பொருலாளர் S.S.ஹாருன் ரசீது அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று கொடியேற்று விழாவையும் மாவட்ட சுற்றுப்பயணத்தையும் திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 16.08.17
மஜக கோவை 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞரணி சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மாநில பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞரணி மற்றும் ஒன் கேர் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா மற்றும் மாவட்ட அணி பகுதி கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 15.08.17