சிவகாசியில் புதிய ஜாவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்...! சிவகாசி.ஆக.23., இன்று 23/08/17 விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்களின் ஜீ கலக்ஷன்ஸ் மென்ஸ்வேர் துணிகடையை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் துவங்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணிகாதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிவகாசி நகர நிர்வாகிகள், இராஜபாளையம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். உடன் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல நிர்வாகி சீனி முஹம்மது ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING விருதுநகர் மாவட்டம். 23.08.17
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இளையராஜா குடும்பத்திற்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…!!
சிவகங்கை.ஆகஸ்டு.21., ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா ஆவார். கடந்த 13.08.2017 அன்று இந்திய எல்லையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சகோதரர் இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் இளையராஜாவின் தாயார், சகோதரி, மனைவி ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். இளையராஜா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி 3 மாதம் கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கண்டனிக்கு வந்து தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்ற நிலையில், (13.08.2017) அன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். எம்.பி.ஏ., எம்.பில்., படித்துள்ள இளையராஜாவின் மனைவிக்கு அரசு வேலை கிடைத்திட உதவி செய்யுமாறு அவரின் உறவினர்கள் மஜக பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு..! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தூத்துக்குடி.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு நேற்று (20.08.2017) மாலை 8 மணி அளவில் மாணம்காத்தான் சமுகநலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. சிறப்புஅழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர் சையது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் தூத்துகுடி, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்சியில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சியின் வளர்ச்சி பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி 21.08.2017.
தூத்துகுடி வடக்கு மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி.! மாநில பொருளாளர் பங்கேற்பு.!!
தூத்துகுடி. ஆக.21., தூத்துகுடி வடக்கு மாவட்டதிற்குட்பட்ட கயத்தார் மற்றும் மாணம்காத்தான் கிளைகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி இளைஞர்பட்டாளம் சூழ மிக பிரம்மாண்டமாய் நேற்று நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார். உடன் தகவல்தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துகுடி வடக்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன், தூத்துகுடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர் செய்யது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலையில். கயத்தார் மாணம்காத்தான் கிளை நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள், தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி வடக்கு மாவட்டம். 20.08.17
தூத்துகுடி தெற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்ச்சி.! கிரிக்கெட் போட்டி துவக்க விழா.!! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!!
தூத்துகுடி.ஆக.21., நேற்று தூத்துகுடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாஹிர் உசேன் நகர் மற்றும் ஆத்தூர் கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். ஆத்தூர் முஸ்லிம் இளைஞர்கள் சார்பாக கிரிக்கெட் போட்டி க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்களின் பட்டாளம் சூழ கிரிக்கெட் போட்டியை மஜக மாநில பொருளாளர் துவங்கி வைத்தது இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார். இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துகுடி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோர், மற்றும் தூத்துகுடி மாவட்ட, நிர்வாகிகள், ஆத்தூர் கிளை நிர்வாகிகள், ஜாஹிர் உசேன் கிளை நிர்வாகிகள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 21.08.17