தூத்துகுடி தெற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்ச்சி.! கிரிக்கெட் போட்டி துவக்க விழா.!! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!!

image

image

image

தூத்துகுடி.ஆக.21., நேற்று தூத்துகுடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாஹிர் உசேன் நகர் மற்றும் ஆத்தூர் கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்ச்சியை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

ஆத்தூர் முஸ்லிம் இளைஞர்கள் சார்பாக கிரிக்கெட் போட்டி க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்களின் பட்டாளம் சூழ கிரிக்கெட் போட்டியை மஜக மாநில பொருளாளர் துவங்கி வைத்தது இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார்.

இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா,
தூத்துகுடி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோர்,

மற்றும் தூத்துகுடி மாவட்ட, நிர்வாகிகள், ஆத்தூர் கிளை நிர்வாகிகள், ஜாஹிர் உசேன் கிளை நிர்வாகிகள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்
21.08.17