சென்னை.அக்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (05.10.2017) மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சீமான் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதுசமயம் தற்போதையை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இச்சந்திப்பில் மஜக மாநிலச் செயலாளர் என்.எ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர், மத்திய சென்னை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் இஸ்மாயில் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயல்வீரர்கள் அஸ்கர் , அம்ஜத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 06.10.17
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
தோழர் திருமுருகன் காந்தி வேலூர் மஜக அலுவலகம் வருகை..!!
வேலூர்.செப்.22., மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அவர்களுடைய சக நிர்வாகிகள் இன்று சகோ.பேரறிவாளன் அவர்களை சந்தித்துவிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்து #மஜக சகோதரர்களை சந்தித்தனர். தோழர்களை மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் வரவேற்றார். மேலும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசுகையில், தோழர் பேரறிவாளன் அவர்களுடையை பரோலிற்காகவும், தன்னுடைய விடுதலைக்காகவும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பெரும்முயற்சி மேற்கொண்டார் எனவும், மேலும் மே-17 இயக்கத்தின் பெரும்பாலான போராட்டங்களில் மஜக மாநில பொருளாளர் தோழர். #S_S_ஹாரூன்_ரசீது அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என கூறி பெருமிதமடைந்தார். அவர் கூறிய வார்த்தைகள் மஜக தோழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இனிய சந்திப்பிற்கு பிறகு தோழர்கள் பிரியாவிடை பெற்றனர். இதில் மஜக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். தகவல்; மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 22.09.2017
ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!
வேலூர்.செப்.12.,வேலுர் கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் விக்டோரியா தூண் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம்,சையத் உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மஜக மாநில பொருளாளர் S.S..ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் மவ்லவி S.S. நாசர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக மாநில செயற்க்குழு உறுப்பினர் சையத் அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்வர், வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் S.MD.நவாஸ், இன்சாப், மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி தோழர் வீர.ரகு, குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் V.முபாரக்
பேரறிவாளனை சந்தித்த மஜக மாநில பொருளாளர்..!
வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில் சந்தித்தார்கள். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது தனக்கு பரோல் கிடைக்க மிகுந்த உறுதுணையாக இருந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தோழர். பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மிகுந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்கள் பின் பேரறிவாளன் தந்தையை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பரோல் கிடைக்க ஆவண செய்த தமிழக அரசிற்கு மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்தார், தோழர்.பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இந்த நெகிழ்வான சந்திப்பின் போது உடன் மாநில அவைத் தலைவர் S.S.நாசிர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் , மாநில செயற்குழு உறுப்பினர் A.சையத் அபுதாஹிர், மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி காஞ்சி
தூத்துக்குடி (தெ) மாவட்டம் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக கிரிக்கெட் போட்டி..!
தூத்துக்குடி.செப்.04., கடந்த 20-08-2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்று போட்டியை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார். அதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இறுதி போட்டியை மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து இறுதி போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணிகளையும் உற்ச்சாகப்படுத்தினார். பின்பு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஆத்தூர் நகர செயலாளர் M.P.முருகானந்தம், மஜக மாவட்ட துணை செயலாளர் A.முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் ஹாஜா, இப்ராஹிம், அரஃபாத், அஃப்சர், அல்தாஃப், ஹாரிஸ், நவாஸ், ரியாஸ், ராஜா முகம்மது ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 03-09-2017