சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன் பிரட், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது மேற்பார்வையில், மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், வடசென்னை முன்னால் மாவட்டத் துணைச் செயலாளர் அன்வர், வட்டச் செயலாளர் ஹனீப் உட்பட நிர்வாகிகள் நிவாரணப்பணியில் ஈடுபட்டனர். உணவுகளை வீடு வீடாக சென்று வழங்கினர். மஜகவின் மனிதநேய பணிகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். ஏற்கனவே பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த பகுதியிலுள்ள குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மாவட்டம்.
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக தலைமையாகத்திற்கு மதமுமுக தலைவர் வருகை..! மாநில பொருளாளருடன் சந்திப்பு..!!
சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் J.சீனி முஹம்மது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவர்களுடன் மதமுமுக மாநில செயலாளர் H.முஹம்மது கடாபி, தலைமை நிலையச் செயலாளர் J.S.மீரான் , தலைமை கழக செயலாளர் A.காதர் ஷரிப் , ஊடக பிரிவு செயலாளர் முஹம்மது ஜியா , மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் H.முஹம்மது கனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா உடன் இருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 30.10.2017
அதிரை மஜக கொடியேற்றம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா…!
அதிரை.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம் திறப்பு விழா 29/10/2017 ஞாயிறு மாலை 5மணியளவில் நகர செயளாலர் செல்லராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னதாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது B.COM அவர்கள் தக்வா பள்ளிவாசல் அருகில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயளாலர் மதுக்கூர்.ராவுத்தர் ஷா, மாநில செயளாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகளுடன்.. குவைத் மண்டல துணை செயளாலர்கள் அதிரை பைசல் அஹமது, நாச்சிக்குளம் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயளாலர் அஹமது கபீர், மாவட்ட துணை செயளாலர் முகைதீன், பேராவூரணி ஸலாம் ஆகியோர், அதிரை நிர்வாகிகளான நகர பொருளாளர் சாகுல் ஹமீது, சமீர் அஹமது, அபுபைதா மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #அதிரை_நகரம் #தஞ்சை_தெற்கு_மாவட்டம்
அதிரையில் IKP குவைத் மண்டல பொறுப்பாளர் பைசல் திருமணம்..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
அதிரை.அக்.29., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹ்மது அவர்கள் திருமணம் (நிக்காஹ்) இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_M.com , துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாநில துணை செயலாளர் வானவில் காதர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், மாவட்ட துணை செயலாளர் மைதீன், அதிரை நகர செயலாளர் செல்ல ராஜா, பொருளாளர் சாகுல் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்
தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !
திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளுர்_மேற்கு_மாவட்டம் #28_10_17