சென்னை.நவ.29., மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை மூலம் சேர்க்கை தகுதி நடைபெற வேண்டும் என தேசிய தகுதி நுழையத் தேர்வு- NEET முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக நீதிக்கு எதிரான இம்முறையை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இத்தேர்வு முறையை எதிர்த்து அரியலூர் மாணவி சகோதரி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சகோதரி அனிதாவின் தற்(படு)கொலைக்கு காரணமான நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் போராட்டம் நடத்த மெரீனா கடற்கரையை நோக்கி சென்றனர். நூற்றுக்கணக்கான காவல் துறையினரால் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகே மடக்கி நூற்றுக்கணக்கான மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக செயல்பட்டாதாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், திருவல்லிக்கேணி முன்னாள் பகுதி செயலாளர் பஷீர் அகமது, மஜகவின் உறுப்பினர் ஜாவித் பாஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று இவ்வழக்கில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றத்தில்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
ஆம்பூரில் களைகட்டிய மஜக பொதுக்கூட்டம்.! பொங்கி எழுந்த நல்லிணக்கம்…!!
வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும்,சிறப்பான நல்லிணக்க உரையை வழங்கினர். தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள். மஜக மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் வழி காட்டுதலில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிரூஸ் ஜமா அவர்கள் தலைமையில் மஜகவினர் மிகச்சிறப்பான பணிகளை செய்திருந்தனர். ஆம்பூரில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடிகள் கட்டப்பட்டுருந்தது. சென்னை_பெங்களூர் நெடுஞ்சாலை முழுக்க கருப்பு வெள்ளை கருஞ்சிவப்புகளால் அலங்கரிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. நகர செயளாலர் M.பிர்தோஸ் அஹமத் (எ) பித்து அவரகளின் வரவேற்புரையுடன், மிகுந்த உற்சாகத்தோடு நல்லிணக்க கூட்டம் தொடங்கியது. பல்வேறு சமுதாய மக்களும் முதன்முறையாக இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உற்சாகமாக ஆம்பூரில் ஒன்று கூடியது பெரும் மனநிறைவை தந்தது. மேடையின் முன்புறம் மட்டுமல்ல, இடமும், வலதும் முன்னும், பின்னும் என ஆர்வமாக பொதுக்கூட்ட உரையை செவி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உதயமானது மஜக..!
கிருஷ்ணகிரி.நவ.23., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த ( 20.11.2017 ) அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்ட்சியில் இருந்து விலகி சகோதரர் நாஸிர் தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன், மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம், பல்லாவரம் ஷஃபி, தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கிருஷ்ணகிரி_மாவட்டம். 20.11.17
வேலூர் காவல்துறை துணை தலைவரை சந்தித்தார் மஜக பொருளாளர்..!
வேலூர்.நவ.23., ஆம்பூர் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்படும் காவல் உதவி ஆய்வாளர் திரு. தவச் செல்வத்தை பணி இடைநீக்கம் செய்து அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போரட்டத்தை கையில் எடுப்போம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதனை தொடர்ந்து கடந்த 21.11.17 அன்று வேலூர் சரங்க DIG காவல்துறை துணை தலைவர் திருமதி.வனிதா அவர்களை சந்தித்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களின் அதிகார துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு என்பதை எடுத்துக்கூறினார்கள். இச்சந்திப்பில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன் , மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம் , பல்லாவரம் ஷபி , தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் S.MD.நவாஸ், குடியாத்தம் நகர செயளாலர் அனிஸ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முஹம்மத்
மஜகவில் இணைந்தார்! மமக துணைத் தலைவர் J.S.ரிபாயி!
தஞ்சை.நவ.11., இன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு இணைந்தார். இந்நிகழ்வில் பொருளாளர் S.S.ஹரூண் ரசீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செயலாளர்கள், தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதின், ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், கோவை பசீர், அப்துல் சமது, பல்லாவரம் ஷபி, புளியங்குடி செய்யது அலி, வசிம் அக்ரம், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோரும், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அகமது கபீர், வடக்கு மாவட்ட செயலாளர் மகருப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம். 11.11.17