தங்கை அனிதாவிற்காக போராடியதில் வழக்கு..! நீதிமன்றத்தில் மஜக பொருளாளர்..!!

image

சென்னை.நவ.29., மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை மூலம் சேர்க்கை தகுதி நடைபெற வேண்டும் என தேசிய தகுதி நுழையத் தேர்வு- NEET முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சமூக நீதிக்கு எதிரான இம்முறையை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இத்தேர்வு முறையை எதிர்த்து அரியலூர் மாணவி சகோதரி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சகோதரி அனிதாவின் தற்(படு)கொலைக்கு காரணமான நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் போராட்டம் நடத்த மெரீனா கடற்கரையை நோக்கி சென்றனர்.

நூற்றுக்கணக்கான காவல் துறையினரால் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகே மடக்கி நூற்றுக்கணக்கான மஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக செயல்பட்டாதாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், திருவல்லிக்கேணி முன்னாள் பகுதி செயலாளர் பஷீர் அகமது, மஜகவின் உறுப்பினர் ஜாவித் பாஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று இவ்வழக்கில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றத்தில் மஜக நிர்வாகிகள் வந்தனர். வழக்கறிஞர் சதாத், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹ்மத், மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை