தோஹா.மே.05., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04.05.2018) நடைபெற்றது. இக்கூட்டம் கத்தார் மண்டல செயலாளர் முஹம்மத் உவைஸ் தலைமையில் நடைபெற்றது.கத்தார் பொருளாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன், கத்தார் ஆலோசகர் கீழக்கரை ஹூசைன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல் அஜீஸ், கத்தார் துணைச் செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன் , மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் அஹ்மத், துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மது ( தளபதி ), சனையா மண்டல பொருளாளர் காட்டுமன்னார்கோயில் ஓலியுல்லா, அத்திக்கடை பாரூக் ( பல்க் ), துஹைல் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் நெல்லை ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கத்தார் நிர்வாக பணிகள், மண்டலங்கள் செயல்பாடுகள், வருகின்றி ரமலான் மாதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படது.தீர்மானங்கள் :1. வருகிற 1 /6/2018 வெள்ளியன்று தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக மஜக மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது மற்றும் மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிபாஃயி_ரஷாதி ஆகியோர்களை அழைத்து கத்தார் MKP சார்பாக மாபொரும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
அறந்தாங்கி.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25.04.18 புதன் காலை 10.30 மணியளவில் அறந்தாங்கி கிருஷ்ணபவன் ஹோட்டல் மேல்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் #இ_முபாரக்_அலி தலைமை தாங்கினார், #தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் #ஏ_எம்_ஹாரிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.பி.சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, மற்றும் எஸ்.ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் எ.அப்துல் ஹமீது, மாவட்ட தகவல், தொழில்நுட்ப அணிச் செயலாளர் அ.அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் கே.ஷாஜஹான், அறந்தாங்கி நகர செயலாளர் டி.ஜகுபர் சாதிக், நகர பொருளாளர் அ.அப்துல் கரீம், ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி கொச்சையான கருத்தை கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பத்திரிகையாளர்கள் உணர்வுபூர்வமாய் எதிர்ப்பை காட்டினார்கள். இதற்காக 30 செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உயிரையும்
காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி சமக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மஜக பொருளாளர் கண்டன உரை..!
சென்னை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்று உரையாற்றினார். சிறையிலிருந்து விடுதலையாகி நேராக சமக நடத்திய காவிரி உரிமை போராட்டத்தில் ஹாரூன் ரஷீது பங்கேற்றார். இப்போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உரையாற்றினார். அவர்களுடன் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, சீனி முகம்மது உட்பட மஜக சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்…
மோடிக்கெதிராக கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மஜக பொருளாளர் ஹாருன் ரசீது, மஜக நிர்வாகிகள் புதுப்பேட்டை யூசுப், பல்லாவரம் அப்துல்லா, பல்லாவரம் அப்துல் சமது, தாம்பரம் சலீம், அஜ்மல் கான், ஷேக் கஜினி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 19 பேருக்கும் செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் பெயில் கிடைத்திருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே. அனைவரும் அநேகமாக இன்று மாலை விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. எமக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், காவிரி போராட்ட தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட மஜகவினர் ஏழு பேரையும் வரவேற்க, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஏ.எஸ் அலாவுதீன் தலைமையில் வரவேற்பு குழு அமைப்பட்டுள்ளது. (தொடர்புக்கு : 04443514550) தொடர்புக்கு: எமது காவிரி உரிமை போராட்டம் சமரசமின்றி தொடரும்... இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 24/04/2018.
வேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்!
வேலூர்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்ட செயலாளர் #பட்டேல்_முஹம்மத்_ஷமீல் அவர்கள் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் #ஜாகிர்_உசேன், #சையத்_உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பொதுமக்கள் தாகம் தீர்க்கும்வகையில் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3ஆம் மண்டல பொருளாளர் ஷேக் இம்ரான், துணை செயலாளர் ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், காதர், 30வது கிளை செயலாளர் மாலிக், துணை செயலாளர் அமானுல்லாஹ், அத்திக்குர் ரஹ்மான், அப்சல் பாஷா, சுல்தான், சித்திக், இஸ்மாயில் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 23.04.2018