நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தொகுதி MLA M. தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டார். முதலில் புத்தூர் அருகில், எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு நாகை திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் மறியல் நடைப்பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். பிறகு தமிமுன் அன்சாரி MLA , தோழர். தனபாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03_04_17
மஜக விவசாய அணி
நாகை வடக்கு மாவட்ட மஜக செயற்குழு கூட்டம்! மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு!
நாகை. ஏப்.02., நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாலர் ஷாஜகான், துணைச் செயலாளர் அபுசாலிஹ், துபை மண்டல துணை செயலாளர் கடலங்குடி ஹர்பின், இளைஞரணி செயலாளர் மிஸ்பா, IT Wing மாவட்ட செயலாளர் ஜெகபர் அலி மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வருகின்ற 8 ஆம் தேதி தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது. உறுப்பினர் சேர்க்கையை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்திவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை வடக்கு மாவட்டம். 02.04.2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…
திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்துவதை கண்டித்தும் தொடர் முழக்க போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் போகம்பூர் திப்பு திடலில் காலை 11மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜகவின் மாநில துணை செயலாளர் திண்டுக்கல். M.அன்சாரி, கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி .சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் A.ஹபிபுல்லா(இரயில்வே), உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் T.முகமது பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர் T.மரிய மனோஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினேஷ் சக்திபாலன், நகர துணை செயலாளர் M.முனாப் தீன், நகர பொருளாளர் S.உமர் முக்தார் ஆகியோர் முன்னிலைவகித்தனர், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் A.முகமது நவ்ஃபல் வரவேற்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மத்திய அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1. தமிழகத்தில் அமல்படுத்த
டெல்லி விவசாய போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரை…
புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவரை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் தோழர் அய்யாக்கண்ணு, தோழர் தினேஷ் ஆகியோர் வரவேற்று விவசாயிகளிடம் உற்சாகமாக அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு விவசாயிகளுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். விவசாயிகள் அவரது உரையை வரவேற்று கைத்தட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அதன் பிறகு பொதுச்செயலாளரிடம் விரிவாக பேசிய விவசாயிகள், இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், எங்களுடைய இந்த பிரச்சனைகளை, போராட்ட உணர்வுகளை முதல்வரின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் அவர்கள் உடனடியாக இன்று இரவே முதல்வருடைய தனி கவனத்திற்கு நேரடியாக எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். பொதுச் செயலாளருடைய இந்த முயற்ச்சிக்கு விவசாயிகள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மூன்று மணிநேரம் அவர்களோடு களத்தில் இருந்த பொதுச் செயலாளர் அவர்கள், அதன்பிறகு அவர்களுடைய
நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை 01/04/2017 சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். காலை புறப்பட்டு செல்லும் அவர் நாளை மதியம் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்கிறார். தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தலைமையகம்.