You are here

நாகையில் மறியல் போர்! விவசாயிகளுடன் தமிமுன் அன்சாரி MLA கைது!

image

image

image

image

நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை  சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும்  இன்று  நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

இதில் தொகுதி MLA M. தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டார்.

முதலில் புத்தூர் அருகில், எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினர். பிறகு நாகை திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் மறியல் நடைப்பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

பிறகு  தமிமுன் அன்சாரி MLA , தோழர். தனபாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இவண்,

நாகை சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகம்.
03_04_17

Top