திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்துவதை கண்டித்தும் தொடர் முழக்க போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் போகம்பூர் திப்பு திடலில் காலை 11மணிக்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜகவின் மாநில துணை செயலாளர் திண்டுக்கல். M.அன்சாரி, கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர்
பழனி .சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் A.ஹபிபுல்லா(இரயில்வே), உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் T.முகமது பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர் T.மரிய மனோஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினேஷ் சக்திபாலன், நகர துணை செயலாளர் M.முனாப் தீன், நகர பொருளாளர் S.உமர் முக்தார் ஆகியோர் முன்னிலைவகித்தனர், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் A.முகமது நவ்ஃபல் வரவேற்புரையாற்றினார்.
இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக மத்திய அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
1. தமிழகத்தில் அமல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
2. டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக விவசாய கடன் அனைத்தையும் இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் .என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
3. நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
4. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் முறையை அமுல்படுத்த வேண்டும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
5. திண்டுக்கல் மரியநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கவுதம் மற்றும் சுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
6. வேடசந்தூரில் நடந்து வரும் கனிமவளம் ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கின்றோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
7. உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் சீமைக் கருவேல மரத்தை அகற்ற உத்தரவு பிறப்பித்தும் முழுமையாக அகற்றாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியரை கண்டிக்கின்றோம் இதில் உரிய கவனம் எடுத்து சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். என்று இப்போராட்டத்தின் வாயிலாகவும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
02.04.2017